Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/முன்னேறு மேலே!

முன்னேறு மேலே!

முன்னேறு மேலே!

முன்னேறு மேலே!

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
* உழைக்கத் தொடங்குங்கள். உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்ல அடையாளத்தை நாம் விட்டுச் சென்றாக வேண்டும்.

* தைரியம், விடாமுயற்சி கொண்டிருங்கள். துணிவுடன் செயலாற்றினால் வெற்றி உறுதி. எதற்காகவும் எள் அளவும் விட்டுக் கொடுத்தல் கூடாது.

* வஞ்சனையால் எதையும் செய்திட முடியாது. நேர்மை, உண்மை, ஆர்வமும் படைத்தவனே செயலாற்றும் சக்தி படைத்தவன். ஆண்மையும், அன்பும் கொண்டு பணியாற்றுங்கள்.

* பலமற்ற மூளையை முதலில் பலப்படுத்துங்கள். பலமுடைய மனிதனை ஞானம் பின்தொடர்ந்து வரும்.

* உள்ளுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியே புலப்படுத்துங்கள். அதைச் சுற்றி ஒவ்வொன்றும் இசைவாக ஒழுங்குபடத் தொடங்கும்.

* உலகமே எதிர்த்து நின்றாலும் மனதில் பட்டதைத் துணிந்து செயல்படுத்துங்கள். குறிக்கோளைக் கைவிடாமல் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us