Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/துணிவுடன் செயலாற்று!

துணிவுடன் செயலாற்று!

துணிவுடன் செயலாற்று!

துணிவுடன் செயலாற்று!

ADDED : நவ 18, 2013 12:11 PM


Google News
Latest Tamil News
* தியாகம் செய்தால் மட்டுமே பிறரின் இதயத்தை வெல்ல முடியும். நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே நன்மையும், உண்மையான வாழ்வையும் அனுபவிக்கிறோம்.

* எனக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலை இருக்கும் வரை, எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது.

* கோழையும், முட்டாளும் விதியை நம்புகிறார்கள். ஆனால், ஆற்றல் மிக்கவனோ என் விதியை நானே வகுப்பேன் என்று உறுதியைப் பெற்றிருப்பான்.

* சுதந்திரமான நிலையில் தான் அன்பு பிரகாசிக்க முடியும். அன்பின் வழியாக மட்டுமே நம் கடமையை இனிதாக நிறைவேற்ற முடியும்.

* எந்த வேலையாக இருந்தாலும், அதை ஒரு வழிபாடாக செய்யுங்கள். அதற்கு அப்பாலுள்ள எந்த விஷயத்தைப் பற்றியும் சிந்தனை செய்ய வேண்டாம்.

* பலவீனத்திற்குப் பரிகாரம் பலத்தை சிந்திப்பதே. துன்பம் வந்த சமயத்தில் துணிவுடன் செயலாற்றுங்கள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us