Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மகரம்செல்வாக்கோடும் சுய கவுரவத்தோடும் வாழ நினைக்கும் மகர ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் குரு பகவான் இருந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8ல் குரு இருக்கும்போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் கவலை உருவாகிஇருக்கலாம். அது மட்டுமின்றி ராகுகேது ஆகியோரும் சாதகமற்ற இடத்தில் பல்வேறு இன்னல்களை தந்திருப்பார்கள். சனி பகவானால் மட்டும் நன்மை கிடைத்திருக்கலாம். இந்த முறை குரு9ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம்.மேலும் ஐந்தாம் பார்வையால் ராசியையும், ஏழாம் பார்வையால் இளைய சகோதரர் மற்றும் தைரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் பிள்ளைகளையும் பார்ப்பதால், வாமனன் உலகளந்து உலகை சொந்தமாக்கிக் கொண்டது போல, நீங்கள் வளமாக வாழ்வீர்கள். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.

குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். குருவின் 9ம் இடத்துப்பார்வை ரிஷபத்தில் விழுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவானும் தற்போது 11ம் இடத்தில் இருப்பது சாதகமானது என்பதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவரால் பொன், பொருள் கிடைப்பதுடன்,மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். ராகு 8ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் வரலாம். கேது 2ம் இடமான கும்பத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது என்றாலும் குருவின் பார்வை பலம் இதை முறியடித்து விடும். இதுவரை நிலவிய பின்தங்கிய நிலை விலகி முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இடர்ப்பாடுகள் அனைத்தும் விலகும். சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபங்கள் கைகூடும். நல்ல வரன் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரலாம். ராகுவால் தம்பதியினர் இடையே சிற்சில கருத்துவேறுபாடுகள் வந்தாலும், நொடிப்பொழுதில் மறைந்து போகும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். புத்தாடை,  அணிகலன்கள் கிடைக்கும். சிலர் தற்போதுள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி போகலாம். புதிய வாகனம் வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அதிகமாக உழைக்க வேண்டி இருந்தாலும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் மனதை
மகிழ்விக்கும். பத்திரிகை, தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். அரசின் உதவி கிடைக்கும். எல்லாத் தொழில்களும் நன்றாக வளர்ச்சி அடையும். இரும்பு தொடர்பான தொழில் அபார சிறப்படையும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கலாம். பழைய கடன்கள் அடைபடும். சேமிப்பு அதிகரிக்கும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக காற்று வீசும். வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு தேடி வரும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம். கடந்த காலத்தில் ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கப்பெறுவர். நெருப்பு
தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் வரப்பெற்று முன்னேற்றம் காணலாம். மதிப்பு, பாராட்டு கிடைக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள். இதுவரை தட்டி பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு போன்றவை இந்த காலத்தில் கிடைத்து விடும்.

அரசியல்வாதிகள்: உன்னத நிலையை அடைந்து விடுவீர்கள். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பொருளாதார வளத்திலும் நல்ல வளர்ச்சி காணலாம்.

மாணவர்கள்: கடந்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்தே படித்திருப்பீர்கள். ஆனால் வரும் கல்வி ஆண்டில் குருவின் பார்வையால் சிறப்பான பலனை பெறலாம். சிலர் மாநில ரேங்க் எடுக்கும் நிலைக்கு வருவர். உயர்கல்வி நிறுவனங்களில் எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்கும்.

விவசாயிகள்: சிறப்பான வருவாயைக் காணலாம். நெல், கோதுமை, கேழ்வரகு
பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். நவீன விவசாயத்தை பயன்படுத்தி மேன்மை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை வளர்ப்பவர்கள் பெரும் முன்னேற்றம் காண்பர். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். கைவிட்டுப்போன சொத்து மீண்டும்கிடைக்கும்.

பெண்கள்: மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். நீண்ட
காலமாக எதிர்பார்த்த ஆடம்பர பொருளை வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து
உதவி உண்டு. குடும்ப மேம்பாட்டுக்காக சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அப்படி செய்தால் வசதி, வாய்ப்புகளை மேலும் பெருக்கிக் கொள்ள முடியும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

பரிகாரம்: ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். கேது சரியில்லாததால் துர்க்கை வழிபாடு நன்மையை தரும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் காளி அம்மனை வழிபடுங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us