Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்

ஜோசியம் - மேஷம்

மேஷம் :

Updated : 10 hours ago

அசுவினி : நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
பரணி : உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குணமாகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1 : மறைமுகத் தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும்.

Advertisement
வார ராசிபலன் ( ஜூலை 25 2025 - ஜூலை 31 2025 )
மேஷம் :

Updated : 6 days ago

திருச்செந்துார் முருகனை வழிபட நல்லது நடக்கும்.
அசுவினி: புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.
பரணி: சுக்கிர பகவான் பண நெருக்கடியை குறைப்பார். ராகு பகவான் தொழிலில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 
கார்த்திகை 1ம் பாதம்: மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். குருவின் பார்வையும், லாப ராகுவும், வாரத்தின் பிற்பகுதியில் ராசிநாதனும் உங்கள் நிலையை உயர்த்துவார். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் வேலை லாபமாகும்.

Advertisement
மாத ராசி பலன்
மேஷம் :

Updated : 16 days ago

அசுவினி : பிறர் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது, பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வது, பூர்வீக சொத்து விவகாரத்தில் அவசரப்படாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். மாதம் முழுவதும் யோகக் காரகனான ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.  வரவேண்டிய பணம் வரும். முடங்கி கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில்  சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். எதிரிகளால் சங்கடங்கள் உண்டாகும் என்றாலும், அதை சமாளித்திடக்கூடிய நிலை உங்களுக்கு உருவாகும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதியில் ஆதாயம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் பொன், பொருள் சேரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.
சந்திராஷ்டமம்: ஆக. 3
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 25, 27, ஆக. 7, 9, 16

பரிகாரம்: விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.

பரணி : நினைத்ததை சாதிக்கும் வரை ஓய்வின்றி உழைக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும் அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் ஜூலை 27 வரை தன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். புதிய வீடு, வாகனம், ஆபரணம் என்ற கனவு நனவாகும். ஆக.8 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். வாங்க நினைத்தவற்றை வாங்குவீர்கள் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் ஜூலை 30 முதல் சத்துரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். தொழில், வியாபாரம், வேலையில் இருந்த எதிர்ப்புகள் மறைமுகத் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். காவல் துறையினருக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஆக.4
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 24, 27, ஆக. 6, 9
பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வேண்டுதல் பலிக்கும்.

கார்த்திகை 1 ம் பாதம் : எந்த நேரத்திலும் தன் செல்வாக்கை இழக்காத உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பெரிய மனிதர்களுடைய தொடர்பும், ஆதரவும் ஏற்படும். குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவதுடன், குல தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வீர்கள். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபம் தரும். புதிய முயற்சி முன்னேற்றத்தை உண்டாக்கும். ஜூலை 30 முதல் ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். வம்பு, வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். ஆரோக்கியம் மேம்படும். ஆக.3 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒவ்வொன்றிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். புதிய வாகனம், நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கடன் தொல்லை நீங்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விளைச்சல் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக.5
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 19, 27, 28, ஆக. 1, 9, 10.
பரிகாரம்: முருகனை வழிபட நினைத்த செயல் நடந்தேறும்.

Advertisement
குருப்பெயர்ச்சி பலன்கள்
மேஷம் :

Updated : 83 days ago

அசுவினி; குருபார்வையால் நன்மை.. செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, மே 11 முதல் உங்கள் ராசிக்கு 3ம் இடமான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். ஜூன் 6ல் மிதுனத்தில் அஸ்தமனம் அடைந்து ஜூலை 6ல் உதயம் ஆகிறார். அக்.8ல் அதிசாரமாக கடகத்திற்கு செல்பவர் நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, வக்ர கதியிலேயே டிச.21ல் மிதுனத்திற்கு வந்து 2026, மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைபவர், மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

கிரகங்களில் குரு பகவான் வக்ரமடையும்போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களையே ஜாதகருக்கு வழங்குபவர் என்பதால், கடகத்திற்கு அதிசாரமாக செல்லும் 40 நாட்களில் வக்ரமடைவதால் அதன்பிறகு 3 ம் இடத்தின் பலன்களையே வழங்குவார். இக்காலத்தில் ஒவ்வொரு வேலைக்கும் அதிகபட்ச முயற்சி மேற்கோள்ள வேண்டியதாக இருக்கும். வருமானத்திலும் பின்னடைவு ஏற்படும். வேலைப்பளு கூடும்.

பார்வை பலன்
குரு சஞ்சாரம் எதிர்மறையாக இருந்தாலும், குரு பார்வை இக்காலத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களை உண்டாக்கும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை இக்காலத்தில் உணர்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொத்து, சுகம் என்ற நிலை உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். நெருக்கடிகள் விலகும்.

சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் செலவு அதிகரிக்கும். வருவாயில் தடை உண்டாகும். உடல்பாதிப்பும் மருத்துவச் செலவும் ஏற்படும்.

ராகு, கேது சஞ்சாரம்
லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வருமானம் உயரும்.  தொழிலில் லாபம் அடையும். புதிய சொத்து சேரும். பணப்புழக்கம் இருக்கும் என்றாலும், 5ம் இட கேதுவால் உறவுகளுடன் பகை, பிள்ளைகளால் நெருக்கடி, பூர்வீக சொத்தில் பிரச்னை என்ற நிலை உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் பெறும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழி வேலைகள் சாதகமாகும். வருமானம் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களில் செவ்வாய் 6,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவர். வருமானம் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன்
குருவின் பார்வைகள், லாப ஸ்தான ராகு, சூரியன் 120 நாட்கள், செவ்வாய் 85 நாட்கள் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தொழில், குடும்பம், வேலை என்று அனைத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். செல்வாக்கை உயர்த்துவர்.

தொழில்
தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சிலர் வெளியூரிலும் தங்கள் வியாபாரத்தை விரிவு செய்வர். போட்டியாளர்கள் பலம் இழப்பர். வாடகை, லீஸ் இடங்களில் தொழில் செய்தவர்கள் அந்த இடத்தை சொந்தமாக வாங்கும் அளவிற்கு முன்னேறுவர்.

பணியாளர்கள்
கடந்த கால நெருக்கடிகள் விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பும், சலுகைகளும் கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
குருபார்வையால் நீண்டநாள் கனவு நனவாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை இல்லாமல் போகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். எந்த ஒன்றிலும் தனித்து நின்று சாதிக்க முடியும். கணவரின் ஆதரவு பலம் தரும்.

கல்வி
படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும். மேற்படிப்பிற்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வர்.  

உடல்நிலை
2026 மார்ச் 6 வரை சனியின் பார்வை உங்கள் ராசியிலும், அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். ஒன்றுவிட்டு ஒன்று என ஏதாவது பாதிப்பு உண்டாகும். மருத்துவச் செலவு ஏற்படும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னை, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். வீடு, வாகனம்  வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

பரிகாரம் : கற்பக விநாயகரை வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.

பரணி: தொழிலில் முன்னேற்றம்..; செவ்வாயை ராசி அதிபதியாகவும், சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு, மறைவு ஸ்தானமான 3ம் இடத்தில் மே11 முதல் மங்கள காரகனான குரு பகவான் சஞ்சரித்து 2026 மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, அஸ்தமனம், அதிசாரம், வக்ரம் என்ற நிலைக்கு ஆளாவதால் அவர் வழங்கும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும். ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அவர் அஸ்தமனம் ஆவதால் சஞ்சாரப் பலனையே அவரால் வழங்க முடியாமல் போகும். அக். 8 முதல் நவ. 18 வரை கடகத்தில் நேர்கதியில் சஞ்சரிப்பதால் அந்த 40 நாட்களும் அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை வழங்குவார்.

மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, பார்த்து வரும் வேலையில் போராட்டம், செய்து வரும் தொழிலில் நெருக்கடி, நட்பு வட்டத்தில் விரிசல், உறவுகளுடன் பகை, வருமானத்தில் தடை என்ற நிலைகளை உண்டாக்குவார். கடக குரு, உழைப்பை அதிகரிப்பார், வருமானத்திற்காக அலைச்சலை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவார்.

பார்வைகளின் பலன்
குரு சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும், அவருடைய பார்வைகள் உங்களை நிமிர வைக்கும். நினைத்ததை சாதிக்க வைக்கும். செய்து வரும் தொழிலை வளர்ச்சியாக்கும்.  உடல்நிலையை சீராக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். கூட்டுத் தொழிலில் லாபம் காண வைக்கும். திருமண வயதினரை மணமேடை ஏற வைக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளிக்கும். விவசாயிகளுக்கு நன்மையை உண்டாக்கும். சொத்து, சுகம், வசதி, வாய்ப்பு என்று வாழ வைக்கும்.

சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். மூடி வைத்த தொழிற் கூடங்கள் இயங்க ஆரம்பிக்கும். வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் அதுவரை இருந்த நிம்மதியான நிலை மாறும். வரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு, உறக்கம் என்பது இல்லாமல் போகும். பிறரைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வீடு, வாகனம், நவீன பொருளுக்காக கடன்படுவீர்கள். அதை அடைப்பதற்காக நிறைய சிரமப் படுவீர்கள். உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டாகும். வருமானத்தில் தடை ஏற்படும். 

ராகு, கேது சஞ்சாரம்
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எல்லா நிலையிலும் உங்களைப் பாதுகாப்பார். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவார். செலவிற்கேற்ற வருமானத்தை வழங்கி சந்தோஷமாக வாழ வைப்பார். தொழில், வியாபாரத்தை முன்னேற்றுவார். சொத்து, சுகம் என மகிழ்ச்சிப் படுத்துவார். ஆனாலும் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவார். பிள்ளைகளால் சங்கடத்தை ஏற்படுத்துவார். மனதில் காதலை உண்டாக்குவார். பூர்வீக சொத்தில் வம்பு, வழக்கு என்ற நிலையை ஏற்படுத்துவார்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால், இக்காலங்கள் உங்களுக்கு யோக காலமாகும். மற்றவரால் முடியாத வேலைகளையும் நீங்கள் செய்து முடிப்பீர்கள். எந்த வித பிரச்னைகள் எதிர் வந்தாலும் அவற்றையெல்லாம் இல்லாமல் செய்வீர்கள். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.

செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களில் 6,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். எடுத்த வேலைகளை முடித்து விட்டுதான் அடுத்த வேலையில் ஈடுபடுவீர்கள். அந்த அளவிற்கு உங்களிடம் ஆற்றல் இருக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன்
உங்கள் வாழ்க்கையில் இக்காலம் யோகமான காலமாகும். நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பம், தொழில், வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய பாதை தெரியும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.

தொழில்
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். பணியாளர்களும் உதவியாக இருப்பர். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். தொழிற்கூடங்கள், வாகன உற்பத்தி விற்பனை, ஸ்பேர் பார்ட்ஸ், டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், சின்னத்திரை துறையினர் வளர்ச்சி காண்பர். 

பணியாளர்கள்
ராகு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் உழைப்பாளர்களின் நிலை உயரும். சிலருக்கு பெரிய நிறுவனங்களின் வாய்ப்பு கதவைத் தட்டும். திறமைக்கு மரியாதை உண்டாகும். புதிய பொறுப்பும், சலுகைகளும் கிடைக்கும்.  பணியாளர்களுக்கு மெமோ, வழக்கு என்ற நிலைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். வேலையின் காரணமாக பிரிந்தவர்கள் இப்போது ஒன்று சேர்வர். உடல்நிலை சீராகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். படிப்பு, வேலை என்ற கனவு நனவாகும்.

கல்வி
திறமை வெளிப்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து முதல் இடத்திற்கு வருவீர்கள். உயர் கல்விக் கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்வர். 

உடல்நிலை
இக்காலத்தில்  உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சிலர் விபத்தையும் சந்திக்க  நேரும் என்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். உணவிலும் கட்டுப்பாடு அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவுகள் ஆச்சரியப்படும் வகையில் முன்னேறுவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சிலர், வசிக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப புதுப்பிப்பர். தம்பதிக்குள் புரிதல் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். 

பரிகாரம் : துர்கையை வழிபட நன்மை பன்மடங்கு அதிகரிக்கும். 

கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு, மே 11 முதல் 3ம் வீட்டில் சஞ்சரித்து முயற்சியில் தடை,  வாழ்க்கையில் நெருக்கடி, தனித்து நிற்க வேண்டிய நிலையை உண்டாக்குவார் குருபகவான். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டில் குடும்ப குருவாக சஞ்சரித்து பண வரவையும், குடும்பத்தில் முன்னேற்றத்தையும், தொழில், வேலையில் ஏற்றத்தையும் தருவார்.

பார்வைகளின் பலன்
குருவின் சஞ்சார நிலையை விட அவர் பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பது பொது விதி. 1 ம் பாதத்தினருக்கு, குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம் அமையும், வருமானம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 6,8,10 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் தீரும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு இல்லாமல் போகும், வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும், மனதில் இருந்த பயம் விலகும். தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

சனி சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை லாப சனியால் வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச்6 முதல் விரயச் சனியால் வரவை விட செலவு அதிகரிக்கும். கடன் தொல்லையால் மனம் பாதிக்கும். மருத்துவச் செலவு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பத்தாமிட சனியால் தொழிலில் தடைகள் ஏற்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் நெருக்கடியும் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு லாப ராகுவால், பல வழிகளிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு 10ல், கேது 4 ல் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை முன்னேற்றுவார். வழக்கை சாதகமாக்குவார். தொழிலில் லாபத்தையும் பணியில்  முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களை தகுதியான இடத்தில் அமர வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழியமைப்பார். வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சியை அதிகரிப்பார்.

செவ்வாய் சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக். 27, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், தன் 3,6,11 ம் இட சஞ்சாரங்களால், எடுத்த வேலைகளை முடிக்க வைப்பார். எண்ணியதை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். ஆற்றலை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வீடு, நிலம் வாங்க வைப்பார்.

பொதுப்பலன்
குருபகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவரால் இக்காலத்தில் பலன்கள் வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் அவருடைய பார்வைகளால் பலன் கிடைக்கும். ராகு, சனி, சூரியன், செவ்வாய் என்று இக்காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.  நீண்டநாள் கனவுகளை நனவாக்குவர்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஏற்றுமதி இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் பெறும். 

பணியாளர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். பார்த்து வரும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் சிலருக்கு ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
இதுவரை இருந்த போராட்டங்கள் விலகும். உடல் பாதிப்புகள் நீங்கும். கல்வி, திருமணம், வேலை போன்ற கனவுகள் நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். பொன், பொருள் சேரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
இக்காலத்தில் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம், விபத்து, அல்சர், சுவாச பிரச்னை, அஜீரணக்கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை, வருமானம், தொழில் என்ற நிலைகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும்.

பரிகாரம் : அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

Advertisement
சனிப்பெயர்ச்சி பலன்கள்
மேஷம் :

Updated : 83 days ago

அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சு
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி பகவான் டிச.20, 2023 அன்று லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்ப்பார்ப்பு எல்லாம் நிறைவேறும் காலமாக இந்த லாபச்சனியின் காலம் இருக்கப் போகிறது.
ரத்தக்காரகர், யுத்தக்காரகர் என்று கூறப்படும் செவ்வாய் பகவான், ஞான மோட்சக்காரகன் கேது பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு பொருளாதார நிலையில் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் விலகப் போகிறது. அரசு வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் இனி அனைத்திலும் லாபம் என்ற நிலையை அடைய இருக்கிறீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறுவதுடன் சுயதொழில் செய்து வருபவர்கள் லாபம் காணும் காலமாக இக்காலம் அமையும். பொன் பொருள் சேர்க்கையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு என முன்னேற்றமான காலமாக இருக்கும்.
20.12.2023 - 6.3.2026  சனி சஞ்சாரத்தில்  
அதிர்ஷ்ட காலம்
சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 –  ஜூன் 19, 2024 வரையிலும் மற்றும் நவ 4, 2024 - பிப். 27, 2025 வரையிலும் மிகப்பெரிய யோகபலனை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அபரிமிதமான வருமானம் உண்டாகும். புதிய வாகனம், சொத்து சேர்க்கை ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும்.
ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் அகலும். ஆரோக்கியம் சீராகும், வழக்குகள் வெற்றியாகும்.
ஏப்.26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்தவை வெற்றியாகும்.
குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை உங்கள் ஜென்ம ராசியிலும், மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை ரிஷபத்திலும், மே 14, 2025 முதல் மிதுனத்திலும் குருபகவான் சஞ்சரிப்பார். இதில் அவர் ரிஷபத்தில் சஞ்சரிக்கும் ஓராண்டு காலம் முழுவதும் குடும்பத்தில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, செல்வாக்கை உண்டாக்குவார்.
பொதுப்பலன்
கும்ப சனி சஞ்சார காலத்தில் பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும்.
தொழில்
தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபம் அதிகரிக்கும். இயந்திரம், எலெக்ட்ரானிக் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும். ஊதியம் உயரும். பதவி உயர்வு உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்.
பெண்கள்
வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமண வாழ்வு அமையும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு உண்டாகும்.
கல்வி
கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை உங்களை உயர்வடையச் செய்யும்.
உடல்நிலை
உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் மருத்துவத்தால் விலகும். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் கட்டுக்குள் வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கையுடன் வாகன, சொத்து சேர்க்கையும் உண்டாகும்.
பரிகாரம் : சனிதோறும் சனீஸ்வரரை வழிபட்டால் வாழ்வு வளமாகும்.

பரணி; பணமழை கொட்டும்
உங்கள் ராசிக்கு தொழில், லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் இதுவரை தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்த நிலையில் டிச 20, 2023 முதல் லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். பணவரவு உண்டாகும். உயர்ந்த பதவிகள் இனி உங்களைத் தேடி வரப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கி உங்கள் நிலையை உயர்த்தப் போகிறது.
களத்திரம், கலை, அதிர்ஷ்டக்காரகன் என கூறப்படும் சுக்கிரன்,  பராக்கிரமக்காரகன் எனப்படும் செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பணமழை கொட்டும். பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். செல்வம், செல்வாக்கு, புதிய பொறுப்பு என நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய வாகனம், வெளிநாடு செல்லும் யோகம், திருமணம், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை, தகுதிக்கேற்ற வேலை, திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள், தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்கி லாபம் காணும் நிலை, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றி என அதிர்ஷ்டமான காலமாக அமையும்.
அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 -  பிப்.15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான  மார்ச் 29, 2025 -  ஜூலை 2, 2025 வரையிலும்,  நவம்பர் 17, 2025 - மார்ச் 6. 2026 வரையிலும் உங்களுக்கு அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார். வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை, வாகன யோகம் என விரும்பியவற்றை எல்லாம் அடைவீர்கள்.
ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். ஏப். 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட வருவாய் வந்து சேரும். வெளிநாட்டுத் தொடர்புகள், முயற்சிகள்  வெற்றியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். பொன் பொருள் சேர்க்கையுடன் புதிய வாகனச் சேர்க்கையும் உண்டாகும்.
குரு சஞ்சாரம்
ஏப். 30, 2024 வரை உங்கள் ஜென்ம ராசியிலும், மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை 2 ம் வீட்டிலும், மே 14, 2025 முதல் 3 ம் வீட்டிலும் குருபகவான் சஞ்சரிப்பார். இதில் 2 ம் வீட்டில் சஞ்சரிக்கும் ஓராண்டு காலம் முழுவதும்  யோகபலன்களை வாரி வழங்குவார். பொருளாதாரத் தடைகள் விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். வருமானம் பலவழியிலும் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும்.
பொதுப் பலன்
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். வெளிநாடு செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். பணப்பற்றாக்குறை விலகும். கடன் அடைபடும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும்.
தொழில்
செய்யும் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் சலுகைகளும் கிடைக்கும். வாகனத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். திரையுலகினர், சின்னத்திரையினர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்கள்
உழைப்பாளர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு ஏற்படும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதிக்குரிய பணி கிடைக்கும். உங்கள் ஆலோசனையை நிர்வாகத்தினர் ஏற்பர்.
பெண்கள்
கல்வியில் உயர்வு உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சிலர் சுயதொழில் தொடங்கி வெற்றி பெறுவர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில்  மதிப்பு உயரும்.
கல்வி
மாணவர்களுக்கு கல்வியின் மீதான அக்கறை அதிகரிக்கும். சிலர் மேற் படிப்பிற்காக வெளிநாடு செல்வீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பமான பாடத்தில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையால் கூடுதல் நன்மை காண்பீர்கள்.
உடல்நிலை
தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் என்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். சரியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று குணமடைவீர்கள். படுக்கையில் இருந்து மருத்துவம் பெற்று வந்தவர்களும் இனி எழுந்து நடந்திடக் கூடிய நிலை உண்டாகும்.
குடும்பம்
குடும்ப உறவுகளிடம் இருந்த சங்கடம் விலகும். மூத்த சகோதரர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடப்பர்.  சிலர் புதிய வீட்டில் குடியேற வாய்ப்புண்டு.
பரிகாரம் : துர்கை வழிபாடு நன்மையளிக்கும். வாழ்க்கையை வளமாக்கும்.

கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்
ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பூமிக்காரகனான செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு மனக்காரகனான சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை முழுமையாக வழங்கிடக் கூடியவராகிறார்.
கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு சனி லாப ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 11ம் வீட்டில் லாபம், யோகத்தை வழங்குபவராகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 10ம் வீட்டில் தொழில், உத்தியோகத்தில் உழைப்பை அதிகரித்திடக்கூடிய நிலையை உண்டாக்குபவராகவும் இருக்கிறார்.

அதிர்ஷ்ட காலம்
சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 வரையிலும் மற்றும்  நவ.4, 2024 - பிப். 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் யோகப்பலன் வழங்கிடுவார். தொழில், உத்தியோகத்தில் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். 2,3,4ம் பாதத்தினருக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். வழக்கமான செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.
ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4ம் பாதத்தினருக்கு ராகுவால் வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஏப்.26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் 1ம் பாதத்தினருக்கு ராகுவால் வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். முயற்சி வெற்றி பெறும்.  
குரு சஞ்சாரம்
ஏப்.30, 2024 வரை 1ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12ம் இடத்திலும்,  மே1, 2024 - மே 13, 2025 வரை முதல் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், மே 14, 2025 முதல் 1ம் பாதத்தினருக்கு 3ம் வீட்டிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும் குருபகவான் சஞ்சரிக்கிறார்.  1ம் பாதத்தினருக்கு 2024 மே முதல் ஓராண்டுக்கு பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். முயற்சிகளில் வெற்றி வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 2025 முதல் யோகத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை வழங்குவார். சமூகத்தில் செல்வாக்கை உயர்த்துவார்.
பொதுப்பலன்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை அடைவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
தொழில்
கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாபச் சனியாலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாலும்  எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள்  வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இண்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம், சினிமாத்துறையினர் வளர்ச்சி காண்பர். என்றாலும் முயற்சி அதிகமாக தேவைப்படும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பணியாளர்கள்
கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு  மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வழக்கு, விசாரணை என்ற நிலையும் சிலருக்கு உண்டாகும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் சிரமம் குறையும்.
பெண்கள்
சுயதொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனை வெற்றிக்கு வழிவகுக்கும். பொதுத்தேர்வு எழுதுபவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்.
உடல்நிலை
நீண்ட நாளாக இருந்த நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடக்கூடிய அளவிற்கு உங்கள் உடல்நிலை அமைந்திருக்கும்.
குடும்பம்
திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.
பரிகாரம் : அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வு வளமாகும்.

Advertisement
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
மேஷம் :

Updated : 83 days ago

அசுவினி; நினைப்பது நடக்கும்..
உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சஞ்சரித்த ராகு, லாப ஸ்தானமான 11 ம் வீட்டிலும், இதுவரை சத்ரு ஜெய ஸ்தானமான 6 ம் வீட்டில் சஞ்சரித்த கேது 5 ம் வீடான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும் ஏப்.26, 2025 முதல் சஞ்சரிக்க உள்ளனர்.

லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேதுவின் 5 ம் இட சஞ்சாரத்தால் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். உறவுகளுடன் சண்டை சச்சரவு, பூர்வீக சொத்தில் பிரச்னைகள், பிள்ளைகளால் சங்கடம், வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை, வீண் அலைச்சல், முயற்சியில் இழுபறி ஏற்படும். புதிய நண்பர்களால் அவமானத்திற்கு ஆளாக நேரும்.

சனி சஞ்சாரம்: 
லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் மார்ச் 6, 2026 வரை சனி பகவானும் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மூடிக் கிடந்த நிறுவனங்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மார்ச் 6, 2026 முதல் விரய ஸ்தானமான 12 ம் வீட்டில் சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரிப்பார். நிம்மதியாக துாங்க முடியாத அளவிற்கு வேலைகளை அதிகரிப்பார். வரவு ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் ஏதாவது  செலவு காத்துக் கொண்டிருக்கும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். மே 11 முதல் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பவரால் திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு வரும். அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் வக்கிரம் அடைவதால் வக்கிர குருவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். டிச. 21 முதல் வக்கிர கதியிலேயே மிதுனத்திற்கு செல்பவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியாகி மே 26 வரை அங்கேயே சஞ்சரிப்பதால் முன்பு அவர் வழங்கிய பலன்களை தொடர்ந்து வழங்குவார். மே 26 முதல் கடகத்திற்கு பெயர்ச்சியாகும் குரு 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றமடையும். விரயச்செலவு கட்டுப்படும்.

பொதுப்பலன்: கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்து, செவ்வாயின் சக்தி கொண்ட உங்களுக்கு லாப ராகு,  2026 மார்ச் 6 வரை சனி, குரு பகவானின் பார்வைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில், குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்க நினைத்த எண்ணம் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

தொழில்: இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மருத்துவம், கெமிக்கல், மெடிக்கல் தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நிர்வாகத்திடம் சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.  சிலருக்கு காதல் விவகாரத்தால் சங்கடம் ஏற்படும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். பிள்ளைகளால் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

கல்வி: படிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஏதாவது தடையை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மனம் குழப்பமடையும். இந்த நேரத்தில் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நன்மையாகும். உயர் கல்விக்குரிய முயற்சியில் கல்லுாரியை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

உடல்நிலை: 2026 மார்ச் 26 வரை ஜென்ம ராசிக்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் சனியின் பார்வை இருப்பதால் உடல்நிலையில் ஏதேனும் சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் என்பதால் மருத்துவச்செலவு நீடிக்கும்.

குடும்பம்: லாப ராகுவால் பணப்புழக்கம் உண்டாகும். விரும்பிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குருபகவானின் பார்வையால் திருமணம், கிரகப்பிரவேசம் என சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

பரணி: பணப்புழக்கம் அதிகரிக்கும்
உங்கள் ராசிக்கு 12 ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, லாப ஸ்தானமான 11 ம் வீட்டிற்கும், 6 ம் வீடான சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது 5 ம் வீடான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திற்கும் ஏப்.26, 2025ல் பெயர்ச்சி ஆகின்றனர்.

லாப ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் ராகுவால் உடல், மன நிலையில் இருந்த சங்கடங்கள், தொல்லைகள் விலகும். புதிய தெம்பு வந்தது போல் இருக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். அதற்கு சூழ்நிலைகளும் சாதகமாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை அமையும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாப ராகு வருவாயை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு தேவையான அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பெரியோரால் ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தும், கவுரவமும் உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றி என வாழ்க்கை வளமாகும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், உறவினரிடையே மனக்கசப்பு, சொத்து விவகாரத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சோதனை, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் கோயில் வழிபாட்டை மருத்துவத்தையும் நாட வேண்டிய நிலை என ஒரு பக்கம் நெருக்கடி ஏற்பட்டாலும், அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சிலருக்கு எதிர்பாலினரின் நட்பு, சந்தோஷம்  அதனால் சமூகத்தில் அவமானம், மரியாதை இழப்பு போன்றவையும் உண்டாகும். சிலர் கோயில் கோயிலாக சென்று வருவீர்கள். ஊர் விட்டு வேறு ஊருக்குச் சென்று வசிக்கும் நிலையும் சிலருக்கு ஏற்படும்.

சனி சஞ்சாரம்: 
லாப ஸ்தானத்திற்குள் ராகு சஞ்சரிக்கும் போது சனி பகவான் அங்கே ஆட்சியாக சஞ்சரிப்பதுடன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவையும் தம் ஏழாம் பார்வையால் மார்ச் 6, 2026 வரை பார்ப்பதால், தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும் என்றாலும் பிள்ளைகளால் சங்கடங்கள் தோன்றும். சொத்து விவகாரம் நீதிமன்ற வழக்கு வரை செல்லும். மார்ச் 6, 2026 முதல் விரய ஸ்தானமான 12 ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவு அதிகரிக்கும். இருப்பதை விற்று நிலைமையை சமாளிக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். வீண் அலைச்சல், முயற்சியில் தோல்வி, மருத்துவச் செலவு  ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். பணவரவில் தடைகள் உண்டாகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் கனவுகளை நனவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை நீக்குவார். நன்மைகளை அதிகரிப்பார். மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து 7, 9, 11 ம் இடங்களைப் பார்ப்பதால் நண்பர்களால் ஆதாயம் கூடும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். தெய்வ அனுகூலமும், பெரிய மனிதர் ஆதரவும் கிடைக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சிலருக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு வரும். அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் வக்கிரமடைவதால்,  முன்பிருந்த ராசியின் பலன்களையே வக்கிர குரு வழங்குவார். டிச.21 முதல் வக்கிர கதியிலேயே மிதுனத்திற்கு செல்பவர் 2026 மார்ச் 17 முதல் வக்கிர நிவர்த்தியாகி, மே 26 வரை அங்கேயே சஞ்சரிப்பதால் முன்பு அவர் வழங்கிய பலன்களை தொடர்ந்து வழங்குவார். மே 26 முதல் கடகத்திற்கு பெயர்ச்சியாகும் குரு அங்கிருந்து 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல்நிலை சீராகும். மறைந்திருந்த உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும்.  வீடு, வாகனம் என செலவு கூடும்

பொதுப்பலன்: சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்து செவ்வாயின் சக்தி கொண்ட உங்களுக்கு, லாப ஸ்தான ராகுவுடன், 2026 மார்ச் 6 வரை சனியும், தொடர்ந்து குரு பகவானின் பார்வைகளும் முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும். ஆதாயம் கூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நினைப்பதை நடத்தி முடிக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 

தொழில்: லாப ஸ்தான சனியுடன், ராகுவும் இணைவதால் தொழில் முன்னேற்றமடையும். வியாபாரிகள் வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். வாகனத்தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், ஸ்டேஷனரி, அழகு சாதனம், பேன்சி ஸ்டோர், ஹார்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். ஆலோசகர்கள், கலைஞர்களின் நிலை உயரும்.


பணியாளர்கள்: உங்கள் திறமையை அறிந்து முதலாளி பாராட்டுவார். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஊதியம் உயரும். புதிய பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்:  வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். பிள்ளைகள் மீது அக்கறை உண்டாகும். படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

கல்வி: ஐந்தாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால் உயர் கல்வியில் தடைகள் ஏற்படும் என்பதால் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது. கடும் முயற்சியால் உயர் கல்விக்குரிய கனவு நனவாகும். விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்வர். 

உடல்நிலை: 2026 மார்ச் 26 வரை ஆயுள் காரகன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை  உடல் பாதிப்பை ஏற்படுத்தும். சிலர் விபத்தை சந்திக்க நேரும். மார்ச் 26 க்கு பிறகு மருத்துவ செலவு அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்: 2026 மார்ச் 26 வரை குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பொன் பொருள், சொத்து சேரும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும் என்றாலும் ஐந்தாமிட கேதுவால் உறவுகளால் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். மார்ச் 26 முதல் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால்  குடும்பத்தில் நெருக்கடி, எதிர்பாராத பிரச்னைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும்.

பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.

கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..;
உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் என்றாலும் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள். கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு லாப ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

இதனால் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு லாபங்களை வழங்கக் கூடியவராகவும், முன்னேற்றத்தை உண்டாக்கக் கூடியவராகவும் யோகப் பலன் வழங்க உள்ளார். 2,3,4ம் பாதத்தினருக்கு தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, பதவிக்கு ஆபத்து, வருமானத்தில் தடை, பொருளாதார நெருக்கடி என பலன் தருவார்.

கேது, கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு,  குடும்பத்தில் பிரச்னை, வாழ்க்கைத் துணையாலும் பிள்ளைகளாலும் கவலை, சிலருக்கு கருச்சிதைவு, பிள்ளைகளுக்கு தோஷம், எதிரிகளால் தொல்லை என்ற நிலையையும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தாயாரின் உடல் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், உடல்நிலையில் கோளாறு, தவறான நட்பால் பொருளாதார இழப்பு, கவுரவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை விற்று சமாளிக்க வேண்டிய நிலையையும் தருவார். சிலர் விபத்திலும் சிக்க நேரும்.

சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். மார்ச் 6, 2026ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை யோகப்பலன் வழங்குவார். வருமானத்தை அதிகரிப்பார், தொழிலை முன்னேற்றுவார், செல்வாக்கை அதிகரிப்பார். அதன் பிறகு விரயச் செலவுகளை உண்டாக்குவார், முயற்சியில் பின்னடைவு, எதிர்பாராத சங்கடத்தை ஏற்படுத்துவார், மருத்துவச் செலவை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, வருமானத்தில் தடை, சிலருக்கு வேலை இழப்பினையும் ஏற்படுத்துவார். மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். தடைபட்ட வேலை நடந்தேறும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும், நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும், குடும்பத்தில் நெருக்கடி விலகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும்,  அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ. 18 முதல் அங்கு வக்கிரம் அடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மே26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். என்பதால் 1ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார், வருமானத்தை உயர்த்துவார், சொத்து சுகங்களை உண்டாக்குவார். திருமண வயதினரின் கனவை நனவாக்குவார். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமண வாழ்வை தருவார், பணப்புழக்கத்தை அதிகரிப்பார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொடக்கத்தில் அலைச்சலை அதிகரிப்பார், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என கனவை நனவாக்குவார் அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இல்லாமல் செய்வார். இழுபறி வழக்குகளில் வெற்றி அளிப்பார். செல்வாக்கை உயர்த்துவார், தொழிலில் முன்னேற்றத்தை, லாபத்தை உண்டாக்குவார். வேலை தேடி வந்தவர்களின் முயற்சியை வெற்றியாக்குவார்.

பொதுப்பலன்: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு  லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும்,  சனியும், குரு பகவானின் பார்வைகளும் லாபத்தை உண்டாக்குவர். வாழ்க்கை, குடும்பம், தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். செயல்களில் ஆதாயத்தையும், ஆடை ஆபரணச் சேர்க்கையையும் வழங்குவர். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி வைப்பர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் 2026 மார்ச் 6 முதல் லாப சனியால் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வைகளால் எடுத்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். புதிதாக சொத்து சேரும். பட்டம், பதவி கிடைக்கும். பணப்புழக்கம் உண்டாகும் என்றாலும் சிம்ம கேதுவால் சின்னச்சின்ன பிரச்சினைகளும் சோதனைகளும் உண்டாகும்.

தொழில்: கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு தொடர்ந்து ராகுவும், மார்ச் 6 வரை சனியும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், மார்ச் 6 முதல் சனியும் யோக பலன்களை வழங்குவார். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நெருக்கடிகள் நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், ஜூவல்லரி தொழில் முன்னேற்றமடையும். லாபம் தரும்.

பணியாளர்கள்: வேலையில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை, பொறுப்பு இல்லை என வருந்தியவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றமும் உயர்வும் கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் வந்தாலும் சரியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணி இடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர், பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.

கல்வி: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு மே 11 க்கு பிறகும், 2,3,4 ம் பாத்த்தினருக்கு மே 11 வரையிலும் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் நிலை உண்டாகும்.

உடல்நிலை: கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை ஆயுள் காரகனின் பார்வை ராசிக்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும்  உண்டாகிறது. 2,3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் ராசிக்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் ஆயுள் காரகனின் பார்வை உண்டாகிறது என்பதால் இக்காலத்தில் உடல் நலிவு, பிணி, விபத்து மருத்துவச் செலவு ஏற்படும்.

குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய சொத்து சேரும். வாகனம், வீடு வகையில் கனவு நனவாகும். பொன், பொருள் சேரும், பிள்ளைகளுக்காக செலவு கூடும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் ஆலோசனையை மற்றவர் ஏற்று செயல்பட நன்மை அதிகரிக்கும்.

பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

Advertisement
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
மேஷம் :

Updated : 110 days ago

அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு வருடம் மிக யோகமான வருடமாக இருக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். புதிய சொத்து சேரும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். 

சனி சஞ்சாரம்:
6.3.2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் தடைகள் விலகும். முடங்கிய  தொழில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். சிறு முயற்சியும் பெரும் லாபம் தரும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கீழ்நிலையில் இருந்தவர்களும் மேல்நிலைக்கு வர முடியும். பணியாளர்களுக்கு நிம்மதி உண்டாகும்.

ராகு, கேது சஞ்சாரம்:
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்க கேதுவால் நன்மை அடைந்து வரும் நிலையில், ஏப். 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால் லாப ராகு உங்கள் நிலையை உயர்த்துவார். தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். சொத்து, சுகம், வாகனம் என கனவுகள் நனவாகும். 

குரு சஞ்சாரம்: 
 தனம், குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து அந்தஸ்து, செல்வாக்கை வழங்கும் குரு பகவான். மே 11 முதல் 3ல் சஞ்சரித்து  பார்வைகளால் உங்கள் நிலையை உயர்த்துவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்கியம், தெய்வ அருள், புதிய வீடு, செல்வாக்கு, பணியில் முன்னேற்றம் என யோகப் பலன்கள் உண்டாகும். அக்.8 முதல் கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி நவ.18 வரை உச்சமாக சஞ்சரிப்பவர் 8, 10, 12 ம் இடங்களைப் பார்த்து மறைந்திருந்த உங்கள் செல்வாக்கை வெளிப்பட வைப்பார். வேலைக்காக முயற்சித்து வருபவர்கள் கனவை நனவாக்குவார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வீடு மனை என சுபச்செலவுகளை அதிகரிப்பார். நவ.18 முதல் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்தில் சஞ்சரித்து 2026 மார்ச் 17 அன்று வக்ர நிவர்த்தி அடையும் குருபகவான் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி வைப்பார்.

சூரிய சஞ்சாரம்: 
2025, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2026 ஜன. 15 - மார்ச் 14 காலங்களில் உங்கள் நிலையை உயர்த்துவார். தைரியமாக செயல்பட வைப்பார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுவிப்பார். வழக்குகளை ஜெயமாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசுவழியில் நன்மை தருவார். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலையை உயர்த்துவார். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார்.

செவ்வாய் சஞ்சாரம்:
2025, ஜூலை 30 - செப்.14, 2026 பிப். 22 - ஏப். 4 காலங்களில் செவ்வாய் 6, 11ல் சஞ்சரிப்பதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். தொழில் முன்னேற்றமடையும். பணவரவு அதிகரிக்கும்.

பொதுப்பலன்
விசுவாவசு ஆண்டில் உங்கள் நிலை முன்னேற்றம் பெறும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வும், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். 

தொழில்: லாப ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதுடன் மிதுன குருவின் பார்வையும் உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். முடங்கிய தொழில் வேகம் எடுக்கும். விற்பனை அதிகரிக்கும். எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், விவசாயம் முன்னேற்றமடையும். வாழ்வில் நிம்மதி உண்டாகும்.

பணியாளர்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட  நெருக்கடி நீங்கும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த மாற்றம், உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். 

பெண்கள்:
விசுவாவசு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். கல்வி, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் புரிவர். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

கல்வி 
படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். சிறந்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

உடல்நிலை
சனி பகவானின் பார்வைகள் ராசிக்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் உண்டாவதால் உடல்நிலை பாதிப்பு தொடரும் என்பதால் பழக்க வழக்கங்களிலும், உணவு உறக்கத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.

குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என கனவு நனவாகும். பொன் பொருள் சேரும்.

பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.

பரணி: பணப்புழக்கம் கூடும் .. திறமையால் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சமூக அந்தஸ்து உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். பணப்புழக்கம் கூடும். பொருளாதார நெருக்கடி விலகும். புதிய சொத்து சேரும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சனி சஞ்சாரம்:
சனிபகவான் 6.3.2026 வரை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். முடங்கிய தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலாளர்கள் நிலை உயரும். பணியாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உயர்வும், மாற்றமும் கிடைக்கும்.

ராகு, கேது சஞ்சாரம்: 
ஏப் 26 முதல் உங்களுக்கு லாப ஸ்தானமான கும்பத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ராகு பணவரவை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். புதிய நட்பால் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்.  கனவு நனவாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் தருவார். அந்நியரால் ஆதாயம் ஏற்படும்.  வெளிநாட்டு முயற்சி வெற்றி பெறும். கேது குடும்பத்தில் சல சலப்பையும்,  பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சோதனையும் ஏற்படுத்துவார்.

குரு சஞ்சாரம்: 
2ல் சஞ்சரித்து குடும்ப நிம்மதி, பணப்புழக்கத்தை அளித்த குரு பகவான் மே 11 முதல் 3ல் சஞ்சரித்து 5, 7, 9 ம் பார்வைகளால் செல்வாக்கை உயர்த்துவார். வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்குவார். திருமண வயதினருக்கு திருமண யோகத்தையும், சிலருக்கு குழந்தை பாக்கியத்தையும் உண்டாக்குவார். தெய்வ அருளுடன் பெரிய மனிதர்கள் துணையும் கிடைக்கும். எதிர்பார்த்த உயர்வு, பணியில் முன்னேற்றம் என நன்மை உண்டாகும். அக். 8 முதல் 4 ம் இடமான கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி நவ.18 வரை உச்சமாக சஞ்சரிப்பவர் 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல்நிலை முன்னேற்றமடையும். செல்வாக்கு வெளிப்படும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலரால் புதிய தொழில் தொடங்கி லாபமடைய முடியும். வீடு, மனை, வாகனம்,  பிள்ளைகளின் படிப்பு என சுபச்செலவு அதிகரிக்கும். நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்தில் சஞ்சரித்து, 2026 மார்ச் 17 அன்று வக்ர நிவர்த்தியாகும் குருபகவான் கனவுகளை நனவாக்குவார். வாழ்வில் முன்னேற்றம் அளிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.

சூரிய சஞ்சாரம்: 
2025, ஜூன் 15 - ஜூலை 16, செப். 17 - அக். 17, 2026 ஜன.15 - மார்ச் 14 காலங்களில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தைரியம் கூடும். முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு மறையும். எதிரிகளை இல்லாமல் செய்வார். இழுபறி வழக்குகளை வெற்றியாக்குவார். புதிய தொழில் முயற்சி நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும்.  வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.

செவ்வாய் சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனான செவ்வாய் 2025, ஜூலை 30 - செப். 14, 2026 பிப். 22 - ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். எதிர்ப்பு விலகும். நோய் பாதிப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டாகும். தொழில் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.

பொதுப்பலன்
கடந்தகால நெருக்கடி விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை வரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வேலைக்காக முயற்சிக்கு  எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளுக்கு  பதவி கிடைக்கும்.  கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். வாகனம், சொத்து சேரும்.

தொழில்: சனி, ராகு சஞ்சாரத்தால் லாப ஸ்தானம் பலமடையும் நிலையில் மிதுன குருவின் பார்வையும் லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழிலில் லாபம் உண்டாகும். விற்பனையாகாத பொருட்கள் விற்பனையாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனம், பைனான்ஸ், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சினிமா, யூடியூப், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள்,  ஆலோசகர்கள், விவசாயத் துறையினர் முன்னேற்றம் காண்பர். 

பணியாளர்களுக்கு ஊதியம் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவினர் இடையே செல்வாக்கு கூடும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். உயர்கல்விக் கனவு நனவாகும். சுய தொழில் செய்பவர்கள் நிலை உயரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும் குழந்தைப்பேறு கிடைக்கும். 

கல்வி 
படிப்பில் அக்கறை உண்டாகும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நினைத்த பாடப்பிரிவில், நினைத்த கல்லூரியில்  இடம் கிடைக்கும். படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.

உடல்நிலை
சனிபகவானின் பார்வையால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். தலை, முகம், மூளை, எலும்பு, முடி, பற்கள் சம்பந்தமாக பாதிப்பு உண்டாக வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. 

குடும்பம்: குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். இடம், வீடு, வாகனம் என வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும்.

பரிகாரம்: பராசக்தியை வழிபட வாழ்வில் சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

கார்த்திகை: வெற்றி நிச்சயம்.. சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தைரியக்காரகனான செவ்வாய் ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

விசுவாவசு ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலை வாய்ப்பு உண்டாகும். பட்டம் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.

சனி சஞ்சாரம்:
கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை லாப சனியாகவும், 2, 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாகவும் சஞ்சரிப்பதால், தொழில் உத்தியோகத்தில் அழுத்தம் இருக்கும். வேலைப்பளுவால் சங்கடப்படுவீர்கள் என்றாலும் நியாயமாக உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் ஆதாயமும் மறுபக்கம் பிள்ளைகளாலும் பூர்வீக சொத்துகளாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு உண்டாகும் என்றாலும் உழைப்பு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உண்டாகும்.

குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, அதன் பின் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 ல் மிதுனத்திற்கு வக்கிரமாகவே செல்பவர் மார்ச் 17, 2026 அன்று அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 11 வரையிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு அதன் பிறகும் யோகபலன்கள் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். குழந்தைப்பேறு கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.

சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2025, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக். 17, 2026, ஜன. 15 – மார்ச் 14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 16, 2026. பிப். 13 – ஏப். 13 காலங்களிலும் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் பலத்தை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணர்வீர்கள். எதிர்ப்பு, போட்டி, மறைமுகத்தொல்லை இல்லாமல் போகும். உடல் பாதிப்பு மறையும். வம்பு வழக்கு சாதகமாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிக நாள் நின்று பலன் தருபவர் ரத்தக்காரகனான செவ்வாய்தான். கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு  ஜூலை 30 – செப். 14, 2026 பிப். 22 – ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு, 2025, ஏப். 14 – ஜூன் 8, செப். 16 – அக். 27, 2026, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் 3, 6, 11 ம் இடங்களிலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நோய், வழக்கு, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு உயரும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும்.

பொதுப்பலன்: வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

தொழில்: செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் லாபம் தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் திறமையை நிர்வாகம் மதிக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும் என்றாலும் பணியில் நேர்மையாகவும் உழைப்பில் உண்மையாகவும் இருப்பது  அவசியம்.

பெண்கள்: திறமைக்கும் தகுதிக்குமான மரியாதை கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

கல்வி: படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வில் நிறயை மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கவனம் அதிகரிக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பம்: கடந்த கால நெருக்கடி விலகும். வரவை வைத்து பழைய கடனை அடைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.................

Advertisement
ஆங்கில புத்தாண்டுப் பலன்கள்
மேஷம் :

Updated : 110 days ago

அசுவினி; யோக காலம்
செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக இருக்கும். இதுவரை இருந்த நெருக்கடி இந்த வருடத்தில் இல்லாமல் போகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வெற்றியடையும். சுயதொழில் செய்பவர்களின் நிலை உயரும். வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். சிலருக்கு சொத்து சேர்க்கையுடன் பொன், பொருள் சேர்க்கை, மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கும்.
சனி சஞ்சாரம்: சனிபகவான் ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் 2025ம் ஆண்டில் தொழில் முன்னேற்றம் அடையும். நினைத்ததை எல்லாம் உங்களால் நிறைவேற்ற முடியும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.

ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நினைப்பது நடந்தேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். மே 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் லாப ராகுவால் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.

குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப் 11 முதல் வக்ர நிவர்த்தியாவதால் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். எதிர்ப்பில்லா நிலையை ஏற்படுத்துவார். மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்கியம், புதிய வீடு கட்டி குடியேறுதல், பூர்வீக சொத்தை அடையும் நிலை என்று அனைத்தும் சுபமாகும். அக். 8 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி வைப்பார்.

சூரிய சஞ்சாரம்: ஜன. 14 முதல் மார்ச் 14 வரையிலான காலத்திலும், ஜூன். 15 - ஜூலை. 16. மற்றும் செப்.17 - அக். 17 காலங்களிலும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்ப்பை இல்லாமல் செய்வார். வழக்குகளை சாதகமாக்குவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். லாபத்தை அதிகரிப்பார். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் நிலையை உயர்த்துவார். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியை வழங்குவார். எதிர்பார்த்த அனுமதிகளைக் கிடைக்க வைப்பார். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் வெற்றியளிப்பார்.

பொதுப்பலன்: 2025 ல் உங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். புதிய சொத்து சேரும், விரும்பிய மாற்றம் ஏற்படும்.

தொழில்: லாப ஸ்தானம் பலமடைவதால்  தொழில் முன்னேற்றமடையும். ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரங்கள் மீண்டும் இயங்கும். லாபம் அதிகரிக்கும். எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம் தொழில் முன்னேற்றமடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

பணியாளர்கள்:  வேலையில் முன்னேற்றமில்லை. எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என வருந்தி வந்தோரின் நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: 2025 முன்னேற்றமான வருடமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும். வேலைப் பார்க்கும் இடத்தில் உயர்வு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமண பாக்கியம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும்.

கல்வி:  படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர். தேர்வில்  எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

உடல்நிலை:  அச்சுறுத்திய நோய்கள் நவீன மருத்துவத்தால் விலகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் அவதிப்பட்ட நிலை மாறும். ஆரோக்கியம் சீராகும்.

குடும்பம்: குடும்பத்தில் நீடித்த பிரச்னைகள் மறையும். தம்பதி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். பொன் பொருளுடன், புதிய வாகனம், சொத்து வாங்குவீர்.

பரிகாரம் : விநாயகரை வணங்கி வர வாழ்வில் வளமுண்டாகும்.

பரணி; அதிர்ஷ்ட வாய்ப்பு
செவ்வாய், சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ஆங்கில வருடத்தில் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். சமூகத்தில்  அந்தஸ்து உயரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் பல வழியிலும் வரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். 

சனி சஞ்சாரம்: சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். 

ராகு, கேது சஞ்சாரம்: மே. 25 வரை கேதுவால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். நினைப்பது நடந்தேறும். வழக்கு வெற்றியாகும். மே. 26 முதல் ராகுவால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். அந்நியரால் ஆதாயம் கூடும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் முன்னேற்றமடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் வக்ர நிவர்த்தியாவதால் உங்களுக்கிருந்த பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். மே. 11 முதல் மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால், திருமண வயதினருக்கு திருமணம். புதிய வீடு கட்டி குடியேறும் நிலை, தொழிலில் முன்னேற்றம், செல்வாக்கு அதிகரிப்பு என்ற நிலை ஏற்படும். அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செல்வாக்கு உயரும்.  தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். புதிய சொத்து சேரும்.


சூரிய சஞ்சாரம்: ஜன. 14 முதல் மார்ச் 14, ஜூன் 15 - ஜூலை 16, செப்.17 - அக். 17 காலங்களில் சூரியன் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானம், லாப ஸ்தானம், முயற்சி ஸ்தானம், சத்ரு ஸ்தானம் ஆகிய இடங்களில் சஞ்சரிப்பதால், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளில் வெற்றியை வழங்குவார். எதிர்பார்ப்புகளை அடைய வைப்பார். பிரச்னைகள், போட்டிகள், வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார்.

பொதுப்பலன்: நீண்டநாள் கனவு நனவாகும். வருமானம் உயரும். கடன்கள் அடையும்.  சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும்.

தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிறிய அளவில் மேற்கொள்ளும் முயற்சியிலும் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் உதவியும் கிடைக்கும். வாகனத்தொழில்,  எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனங்கள், பைனான்ஸ், விவசாயம், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் முன்னேற்றமடையும். திரையுலகினர், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், ஆலோசகர்கள் நிலை முன்னேற்றமடையும்.

பணியாளர்கள்: தனியார் துறையில் பணியாற்றி வருபவர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். கடைநிலை ஊழியர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

பெண்கள்: வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்.  சிலருக்கு வேலையில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் செல்வாக்கு கூடும். சுய தொழில் புரிவோருக்கு வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். பொன், பொருள் சேரும். கணவரின் அன்பு அதிகரிக்கும்.

கல்வி: ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும். தேர்வில்  எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: நோயால் அவதிப்பட்ட நிலை மாறும். படுக்கையில் படுத்திருந்தவர்களும் எழுந்து நடமாடுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறை தீரும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் ஏற்பட்ட சிரமம் முடிவிற்கு வரும்.

குடும்பம்: தம்பதி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள். குடும்பத்தில்  நெருக்கடி விலகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பொன், பொருள் சேரும். புதிய வாகனம், சொத்து வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம் : துர்கையை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

கார்த்திகை; முயற்சியில் வெற்றி
சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1 ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

2025 ம் ஆண்டில் கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும். நினைப்பது நடந்தேறும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு முயற்சி வெற்றியாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். வேலை தேடி வந்தவர்களின் கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.

சனி சஞ்சாரம்: கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் லாபாதிபதியாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியாகவும் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த லாபத்தை வழங்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். தொழில் மீதான அக்கறையை அதிகரிப்பார்.

ராகு, கேது சஞ்சாரம்: 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை கேதுவும், அதன்பிறகு ராகுவும் எதிர்பார்ப்புகளில் ஆதாயத்தை வழங்குவார். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். வழக்கில் வெற்றி தருவார். 2,3,4 ம்  பாதத்தினருக்கு மே 25 வரை லாப ராகு வருமானத்தை அள்ளித் தருவார். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். அந்நியரால் ஆதாயத்தை வழங்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். அதன்பிறகு உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும்.

குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே. 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர், அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே10 வரை பொருளாதாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதி. வழக்கில் வெற்றியை வழங்குவார். அதன்பின் திருமண வயதினருக்கு திருமணம், வீடு கட்டி குடியேறுதல், தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே10 வரை பார்வைகளால் முன்னேற்றம், திருமண யோகம், குழந்தை பாக்கியம் தருவார். மே 11 முதல் உடல்நிலையில் முன்னேற்றம். வழக்கில் வெற்றி, செல்வாக்கு, அந்தஸ்து. வேலைவாய்ப்பு, பட்டம். பதவி என உங்கள் நிலையை உயர்த்துவார்.

சூரிய சஞ்சாரம்: கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு ஜன. 14 - மார்ச் 14 காலத்திலும், ஜூன். 15 - ஜூலை 16, செப்.17 - அக். 17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப். 13 - ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ. 16 காலங்களிலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன்,  தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். பணப்புழக்கம் கூடும். எதிர்பார்த்த வரவு வரும். செல்வாக்கு கூடும். ஊழியர்கள் எதிர்பார்த்த மாற்றம், உயர்வை தருவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி அளிப்பார். பிரச்னைகள், போட்டிகள், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

பொதுப்பலன்: உங்கள் நிலை உயரும். இழுபறியான வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய வாய்ப்பு தேடி வரும். அரசு வழியில் ஆதாயம், உறவினர்களால் உதவி, புதிய சொத்து சேர்க்கை. திருமண யோகம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். முயற்சிகள் வழியே எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள். 

தொழில்: தடைபட்ட முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் தரும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். தொழிலில் இருந்த தேக்கம் நீங்கி. விற்பனை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். என்றாலும் வேலையில் கவனமாக இருப்பதும், பிறருடைய விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மையாகும்.

பெண்கள்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு  எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி: படிப்பில் ஆர்வம் கூடும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

உடல்நிலை: நீண்டகால நோய்களும் இப்போது சரியாகும். படுக்கையில் படுத்திருந்தவர்களும் எழுந்து நடமாடுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறை நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு  உடல்நிலை முன்னேற்றமடையும்.

குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும்.

பரிகாரம் : குருபகவானை வழிபட வாழ்வு வளமாகும். நன்மை நடந்தேறும்.

Advertisement

Advertisement

Advertisement Tariff

இன்றைய ராசி
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
வரவு
சாந்தம்
பயம்
உற்சாகம்
அமைதி
இன்பம்
மறதி
தனம்
பாராட்டு
நற்செயல்
பக்தி
உயர்வு




      Our Apps Available On




      Dinamalar

      Follow us