Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கும்பம்பேச்சால் பிறரை கவர்ந்திழுக்கும் கும்ப ராசி அன்பர்களே!  

இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும். குருபகவான் தற்போது 9-ம் இடமான துலாம் ராசியில் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  2018 அக்.5ல் 10-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவது சிறப்பானதல்ல. 2019 பிப்.10ல் 11-ம் இடமான தனுசு ராசிக்கு மாறும் போது நன்மை அதிகரிக்கும்.  

ராசிக்கு 6-ம் இடத்தில் ராகு இருப்பதால் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். 2019 பிப்.13ல் அவர் 5-ம் இடத்திற்கு வருவதால்  இடையூறு ஏற்படலாம். ராசிக்கு 12ம் இடமான மகரத்தில் கேது இருப்பது நல்லதல்ல. 2019 பிப். 13ல் 11-ம் இடமான தனுசு ராசிக்கு மாறியபின் உடல்நலம் மேம்படும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனிபகவான்  ராசிக்கு 11-ம் இடத்தில் இருப்பதால் பொன், பொருள் சேரும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.

மொத்தத்தில் தினமும் “ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி” என்று பாடத் தோன்றும்.  2018 ஏப்ரல் –  செப்டம்பர் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் கூடும்.   தடைகள் அனைத்தும் விலகும்.  வாகன பயணத்தால் நன்மை உண்டாகும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

பணியாளர்கள் குருவின் பலத்தால் மேன்மை காண்பர். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.

வியாபாரத்தில் வருமானம் பன்மடங்கு உயரும்.  பணக்கஷ்டம் நீங்கி  உங்களை பிறர் அண்டி நிற்கும் நிலை உருவாகும்.  

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். சேமிக்கும் விதத்தில் பணவரவு  அதிகரிக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பொறுத்திருக்க நேரிடும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல பலன் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். கால்நடை வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும்.  வழக்கு விவகாரத்தில் முடிவு திருப்திகரமாக இருக்கும்.

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம்.வேலைக்கு செல்லும் பெண்கள் முன்னேற்றமான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் குருபகவானால் குடும்பத்தில் குழப்பம் வரலாம். பொருள் நஷ்டம், மன சஞ்சலம் உருவாகலாம். ஆனால் 2019 பிப்.10க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களால் நன்மை கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமையும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.

பணியாளர்களுக்கு பிப்.10க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும்.

வியாபாரிகளுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.  தொழில் விஷயமாக ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை மறையும். பிப்.13 பிறகு பங்கு வர்த்தகம் லாபம் தரும்.  கலைஞர்கள் சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் பண விஷயத்தில் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. பிப்.10க்கு பிறகு குரு சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் நல்ல வருமானத்தை காணலாம். எள், கரும்பு, கோதுமை போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பிப்.13க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள்  குடும்ப ஒற்றுமைக்காக  விட்டுக் கொடுத்து போகவும். இருப்பினும் குருபகவானின் 5-ம் இடத்து பார்வையால் நன்மை உண்டாகும். பிப்.10க்கு பிறகு சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

பரிகாரம்:
* ஞாயிறன்று ராகு காலத்தில் காளிக்கு அர்ச்சனை
* தேய்பிறை அஷ்டமியன்று  பைரவர் வழிபாடு
* வெள்ளியன்று மாலையில் லட்சுமிக்கு நெய்தீபம்


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us