நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில்
ADDED : 151 days ago
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் நானி தற்போது 'தி பாரடைஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஓட்டேலா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 21ல் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'சாஹோ, தே கால் ஹிம் ஓஜி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுஜித் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் நானி.
ஏற்கனவே இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமையல்காரர் மற்றும் கேங்க்ஸ்டர் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நானி நடிக்கிறார். இந்த சம்மரில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. 2027ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.