உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்குலியின் வாழ்க்கை படம் துவங்கியது

கங்குலியின் வாழ்க்கை படம் துவங்கியது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தாதா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவர். இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகிறது. ‛தாதா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அவரது வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, விக்ரமாதித்யா மோத்வானே இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கி உள்ளது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஜ்குமார் ராவ் வெளியிட்ட பதிவில், ‛‛துவங்கியது, ஒரே ஒரு தாதா'' என குறிப்பிட்டுள்ளார்.

கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தது முதல் நவீன கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு வரை உள்ள காலக்கட்டத்தில் இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என தெரிகிறது. இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !