உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்மர் ட்ரீட் உறுதி ; அதிர வைக்கும் 'பேட்ரியாட்' டீசர்

சம்மர் ட்ரீட் உறுதி ; அதிர வைக்கும் 'பேட்ரியாட்' டீசர்


மலையாள திரையுலகில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ளது. 'பேட்ரியாட்' மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். நடிகை ரேவதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் முதலில் ஏப்ரல் 3ம் தேதி வெளியாவதாக திட்டமிடப்பட்டு, தற்போது மே 1ம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பேட்ரியாட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ராணுவ பின்னணியில் கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் பார்க்கும்போது நிச்சயமாக இந்த சம்மர் விடுமுறைக்கு பேட்ரியாட் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !