உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு?

சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு?


மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில், புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார் இயக்குனர் சுந்தர்.சி. அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு களம் இறங்கியுள்ளார். சினிமாவில் சுந்தர்.சிக்கு ஏகப்பட்ட நண்பர்கள். அவர்கள் மதுரைக்கு வந்து பிரசாரம் செய்வார்களா என கேள்வி எழுந்துள்ளது.
இப்போது 'புருஷன்' படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. அதில் விஷால், தமன்னா நடிக்கிறார்கள். அவர்கள் சுந்தர்.சிக்கு ஆதரவாக மதுரைக்கு வந்து பேசுவார்களா? சுந்தர்.சி படத்தில் நடித்த மற்றவர்கள் மதுரையில் பிரசாரம் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேசமயம் சுந்தர்.சியை எதிர்த்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிற்கிறார். சுந்தர்.சிக்கு ஆதரவாக பேசினால், அது அவரை எதிர்ப்பதாக இருக்கும். அது, துணை முதல்வர் உதயநிதி காதுக்கு, ஆளுங்கட்சி தலைமைக்கு செல்லும். அது சிக்கலை உருவாக்கும் என பலர் நினைக்கிறார்கள். அதனால், சுந்தர்.சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டார்கள் என கூறப்படுகிறது. மதுரையை சேர்ந்த வடிவேலு, திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனாலும், அவர் சுந்தர்.சிக்கு நண்பர் என்பதால், அந்த தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பேசமாட்டார் என தெரிகிறது. குஷ்பு, சுந்தர். சி நண்பரான தவெக தலைவர் விஜய், மதுரை மத்திய தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !