உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன்

அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு பஞ்சமே கிடையாது. இன்றைய தமிழ் சினிமாவிலும் நிறைய வாரிசுகள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை தேவயானி, இயக்குனர், நடிகருமான ராஜகுமாரன் தம்பதியினரின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன் 'ரஞ்ஜன்' படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற 'கோர்ட்' படத்தின் தமிழ் ரீமேக்கை தியாகராஜன் இயக்க அவரது மகன் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரி நடிகராக அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்கே சுரேஷ், மைம் கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அம்மா தேவயானியைப் போல மகள் பிரியங்கா, தமிழ் சினிமாவில் தடம் பதிப்பாரா என்பது 'ரஞ்ஜன்' படம் வந்த பிறகு தெரியும். இன்றைய நிகழ்வில் பிரியங்காவையும் பலரும் வாழ்த்தி சினிமாவுக்கு வரவேற்றார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !