தன் வயதை வெளிப்படையாக சொன்ன ராஷ்மிகா மந்தனா
சினிமா நடிகைகள் அவர்களுடைய வயதை எப்போதும் சொல்லவே மாட்டார்கள். ரசிகர்களுக்கு என்றும் இளமையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அதை எப்போதுமே மறைப்பார்கள். அந்தக் காலத்திலிருந்தே இதை பெரும்பாலான நடிகைகள் பின்பற்றி வருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது உண்மையான வயதைக் குறிப்பிட்டு தனது பிறந்த நாள் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. அதனால், இந்தப் பிறந்தநாள் அவருக்கு ஸ்பெஷல் தான்.
“என் 30வது பிறந்தநாள் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சிறிது காலம் கழித்து வீட்டுக்குத் திரும்பினேன். நான் வளர்ந்து வந்த கோயிலுக்கு சென்றேன். என் பள்ளிக்கு சென்று வெளியிலிருந்தே பார்த்தேன். சிறிது நேரம் சிறுவயதை நினைவு கூர்ந்தேன்.
இன்று நான் இந்த நிலையில் இருக்க காரணமானவர்களிடையே, எனக்கு என்றென்றும் இருப்பவர்களுடன் கேக் வெட்டினேன். திருமணத்திற்கு வர முடியாத உறவினர்களை, பிறந்தநாள் முதல் இன்று வரை என்னை ஆசீர்வதித்து வந்தவர்களை இரவு உணவு கூட்டத்தில் சந்தித்தேன்.
பள்ளி நாட்களிலிருந்து என் எல்லாவற்றின் ஒரு பகுதியாக இருந்த என் பெண் நண்பர்கள் முதல், இன்று என் நண்பர்களைவிட குடும்பத்தைப் போல இருக்கும் என் நண்பர்கள் வரை. வாழ்க்கையில் எல்லாம் ஒரு நல்ல காரணத்திற்காகவே நடக்கிறது எனத் தோன்றுகிறது, இதுவே அந்தக் காரணம்! எல்லாமும் மதிப்பானதாக உணர்கிறது!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சில புகைப்படங்களுடன் அவர் பகிர்ந்துள்ள இந்தப் பதிவிற்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் 2.6 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது.