உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' மொத்த படமும் 'லீக்' : யார் செய்த வேலை?

'ஜனநாயகன்' மொத்த படமும் 'லீக்' : யார் செய்த வேலை?

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் நீதிமன்ற வழக்கு தாக்கல், பிறகு வாபஸ் என பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்கிவிட்டதாகத் தகவல். ஆனால், தேர்தலை முன்னிட்டு பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 'ஜனநாயகன்' படத்தின் 5 நிமிட சண்டைக் காட்சிகள் இணையத்தில் 'லீக்' ஆகின. அதன்பின் மொத்த படமுமே லீக் ஆகியுள்ளது. 5 நிமிட சண்டைக் காட்சிகள் 'லீக்' ஆனதுமே சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் பலரும் “அந்தக் காட்சிகளைப் பகிர வேண்டாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என ஒரே மாதிரியாகப் பதிவுகளைப் பகிர்ந்தனர். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் கடந்த வருடம் வந்த போதும், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் வந்த போதும் விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அந்தப் படங்களின் 'பைரசி' வீடியோ 'லின்க்'குகளைப் பகிர்ந்தனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்தது இன்று அவரது படத்திற்கே திரும்பியுள்ளது என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இப்படத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்கள். ஆனால், அது நடக்கவில்லை. படத்தில் தேர்தல் சம்பந்தமாக நிறைய 'பில்டப்' காட்சிகள் இருப்பதால் படத்தைத் திட்டமிட்டே தடுக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் இருக்கிறது.

'ஜனநாயகன்' பற்றி பெரிதும் பேசாத விஜய் கடைசியாக நெல்லையில் நடத்திய பிரச்சாரத்தில் அப்படம் பற்றிப் பேசினார். அவர் பேசிய சில தினங்களுக்குள் படத்தை இணையத்தில் 'லீக்' செய்துள்ளார்கள். இது யார் பார்த்த வேலை என சமூக வலைத்தளங்களில் பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், பின்னர் தணிக்கை வாரியம் ஆகியோர் மட்டுமே இந்தப் படத்தை இதுவரை பார்த்திருக்க வாய்ப்புண்டு. மொத்த படத்திலிருந்து சிறு சிறு காட்சிகளாக எடிட் செய்து பலரும் அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த 'லீக்' குறித்து தயாரிப்பு நிறுவனம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முழு படமும் லீக் ஆனது விஜய் தரப்புக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

SULLAN, chennai
2026-04-10 14:03:05

கர்மா ஸ் பூமராங் ..