உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் படம் லீக் : 500 கோடி பிஸினஸிற்கு பாதிப்பு, என்ன செய்ய போகிறார் விஜய்...?

ஜனநாயகன் படம் லீக் : 500 கோடி பிஸினஸிற்கு பாதிப்பு, என்ன செய்ய போகிறார் விஜய்...?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை எந்த நேரத்தில் தொடங்கினார்களோ? அவ்வளவு பாதிப்பு, பிரச்னை, தடைகள். முதலில் ஜனவரி 9ம் தேதி இந்த படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் இறுதியில் சென்சார் பிரச்னைகள் தொடங்கின. அதனால், ஜனவரி 9ல் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்து கோர்ட்டில் வழக்கு, மேல்முறையீடு, வழக்கு வாபஸ் காரணமாக 3 மாதங்கள் ஓடிவிட்டது. இன்னமும் படத்துக்கு முறைப்படி சென்சார சான்றிதழ் கிடைக்கவில்லை.

கடந்த வாரம் மும்பையில் மறு தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டனர். இருப்பினும் இது தேர்தல்காலம் என்பதாலும், விஜய் தவெக தலைவராக இருப்பதால் தேர்தல் கமிஷன் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறிவிட்டதாக தகவல். தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், ஜனநாயகன் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.



இந்நிலையில், திருநெல்வேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் முதலில் ஜனநாயகன் குறித்து வாய் திறந்தார் விஜய். எனக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் கொடுத்தார்கள். ஜனநாயகனை முடக்கி விட்டார்கள் என்று பொங்கினார். அவர் பேசிய மறுநாள் இரவே, அதாவது நேற்று இரவே ஜனநாயகன் படத்தின் முக்கியமான காட்சிகள் நெட்டில் நல்ல குவாலிட்டியுடன் வெளியாகின. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை சின்ன, சின்ன பிட்களாக ஜனநாயகன் படத்தின் காட்சிகள் வெளியாகின. இன்னும் ஒருபடி மேலேபோய் முழு படமும் வெளியாகி படக்குழுவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒரு முன்னணி நடிகர் நடித்த படம், ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெட்டில் லீக் ஆனது எப்படி என்று பலருக்கும் சந்தேகம். அந்த காட்சிகளை பார்த்தவர்கள் இது எடிட்டர் டேபிளில் இருந்து லீக் ஆக வாய்ப்பு. அந்த பிரிண்ட்டில் எடிட்டர் ரெபரன்ஸ் என பதிவு உள்ளது. ஒரு படத்தை இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர் ஆகியோர் முன்னமே பார்த்து, அடுத்த கட்ட பணிகளை செய்வார்கள். அப்படி அனுப்பப்பட்ட பிரிண்ட்டில் இருந்து லீக் ஆகியுள்ளது. இது படக்குழுவினர் செய்த வேலைதான் என உறுதியாக சொல்கிறார்கள். அது குறித்த விசாரணை நடந்து வருகிறது.



இந்நிலையில் இப்படி முழு படமும் லீக் ஆகியுள்ளது. தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், சாட்டிலைட், டிஜிட்டல் வாங்கியவர்களுக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படம் 500 கோடி அளவுக்கு பிஸினஸ் ஆகியுள்ளது. இப்போது படம் லீக் ஆகியுள்ளதால் தியேட்டரில் வரவேற்பை பெறுவது கஷ்டம். அதனால், தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் பயப்படுகிறார்களாம்.

சாட்டிலைட் பிஸினஸ் ஆகிவிட்டது. டிஜிட்டலில் சிக்கல் நீடிக்கிறது. அவர்களுக்கு இந்த பிரச்னையால் வியாபாரம் பாதிக்கப்படும் என நினைக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர் பணத்தை திருப்பி தர வேண்டும் அல்லது தொகையை குறைக்க வேண்டும் என்று பிரஷர் கொடுக்க வாய்ப்பு. அதனால், ஹீரோவும் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி தர வேண்டிய நிலை ஏற்படும். இப்படியாக பல சிக்கல்களை பட லீக் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் லீக் காட்சிகளை பார்த்தவர்கள் இது தெலுங்கில் வந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது அப்படமாக தெரிய வந்துள்ளது. இதுவும் ஜனநாயகன் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.



2010ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஜக்குபாய் படத்துக்கு இப்படி பாதிப்பு வந்தது. அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெட்டில் லீக் ஆகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பல கோடி இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தில் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார். சம்பளத்தை குறைத்து, பணத்தை திருப்பி கொடுப்பாரா? அல்லது முழு பொறுப்பை ஏற்பாரா என்பது போக போக தெரியும். விஜய் அரசியலுக்கு வந்ததாலே ஜனநாயகன் படத்துக்கு இவ்வளவு பாதிப்பு. ஆகவே, படத்தின் நஷ்ட கணக்குகளை அவரே ஏற்க வேண்டும். ஜனநாயகன் படம் லீக் ஆனதால் படத் தயாரிப்பு நிறுவனம், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு அவரே பொறுப்பு. அதற்கான பணத்தை அவரே திரும்ப தர வேண்டும் என்று பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

Shekar, Mumbai
2026-04-10 20:33:21

நான் வாங்குன சம்பளத்துக்கு நடிச்சி கொடுத்துட்டேன். இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தயாரிப்பாளர் எக்கேடுகெட்டா எனக்கென்ன?


கொங்கு தமிழன் பிரசாந்த்
2026-04-10 17:08:21

ரிலீஸ் செஞ்சதே விஜய் தானே. KVN புரொடக்ஷன் தான் பலியாடு.


angbu ganesh, chennai
2026-04-10 14:14:02

எனக்கென்னவோ விஜய் மீதுதான் சந்தேகம், இன்னும் ரிலீஸ் ஆகல சென்சார் செர்டிபிகேட் கொடுக்க படல, ஆனா பிரிண்ட் ஓர் லிங்க் விஜய் கிட்ட கண்டிப்பா இருக்கும் அவர் அரசியல் லாபத்திற்காக இப்படி செஞ்சிருந்தா