உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோபிசந்த் நடிப்பில் வரலாற்று படமாக உருவாகும் 'பாரத வர்ஷா'

கோபிசந்த் நடிப்பில் வரலாற்று படமாக உருவாகும் 'பாரத வர்ஷா'


தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகனாக மாறி தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் கோபிசந்த். இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2024ல் இவர் நடித்த 'பீமா' மற்றும் 'விஸ்வம்' ஆகிய படங்கள் வெளியாகியும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

அதேசமயம் கடந்த இரண்டு வருடமாக அவரது புதிய பல அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் 'பாரத வர்ஷா ; சாகா ஆப் சுலா' என்கிற படத்தில் நடிக்கிறார். இவரது 33வது படமாக உருவாகும் இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாகிறது. இந்த படத்தை இயக்குனர் சங்கல்ப் இயக்குகிறார். கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !