உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாலு ஹீரோயின் நடிக்கும் படம் : ஆனா, யாருமே ஹீரோயின் இல்ல

நாலு ஹீரோயின் நடிக்கும் படம் : ஆனா, யாருமே ஹீரோயின் இல்ல

மனு ஆனந்த் இயக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் சரத்குமார், ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கிறார்கள். இதில் மஞ்சு வாரியர், அதுல்யா, அனகா, ரைசா என 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். இவர்கள் யாருமே யாருக்கும் ஹீரோயின் இல்லையாம். காரணம் உளவாளிகள் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. அதனால், ஜோடி இல்லை. எல்லாமே ஒரு டீமில் இருப்பவர்கள் அல்லது எதிரணியில் இருப்பவர்கள் என்ற பாணியில் படம் நகர்கிறதாம்.

மஞ்சு வாரியரும் பல பேட்டிகளில் தான் யார், என்ன கேரக்டர் என்பதை தெளிவாக சொல்ல மறுத்துவிட்டார். விடுதலை படத்தில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. வேட்டையன் படத்தில் டம்மி ஆனது. இந்த படத்தில் அந்த படங்களை விட வலுவான கேரக்டர். தனக்கு ஆக் ஷன் காட்சிகள் இருக்கிறது, படம் ஹிட்டாகும், தனக்கு ஏமாற்றாத ரோல் என தோழிகளிடம் மஞ்சுவாரியர் கூறி வருகிறாராம். மலையாள நடிகைகளில் மஞ்சுவாரியர் தனி ரகம். அவரை அவ்வளவு எளிதில் நடிக்க வைக்க முடியாது. அவருக்கு கதை, கேரக்டர், கம்பெனி, சம்பளம், சக நடிகர்கள் செட்டானால் மட்டுமே நடிப்பாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !