ராமாயணா முதல் பாகத்தில் ரன்பீருடன் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை : யஷ்
ராமாயணா என்ற புகழ்பெற்ற புராண காவியத்தை உலக அளவில் வெளியிடும் நோக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாரித்து வருகிறார்கள். சினிமாகான் 2026 விழாவில் இப்பட குழுவில் இருந்து நடிகரும், இணை தயாரிப்பாருமான யஷ், இயக்குனர் நிதேஷ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது யஷ் ஹாலிவுட் ஊடகங்களுடன் கலந்துரையாடியபோது, இந்த படத்தின் கதை குறித்த ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் ராமாயணா படத்தின் முதல் பாகத்தில் தனது கதாபாத்திரமான ராவணனுக்கும், ராமராக நடிக்கும் ரன்பீருக்கும் இடையே எந்த இணைப்பு காட்சிகளும் இல்லை. நாங்கள் இருவரும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், ராவணனுக்கு தனி ராஜ்யம், ராமருக்கு தனி ராஜ்ஜியம் என்ற அடிப்படையில் இந்த இரண்டு பாகங்களும் உருவாக்கப்பட்டு உள்ளதாம். முதல் பாகத்தில் ஒரு சீனில் கூட ராமரும், ராவணனும் இணைந்து நடிக்காத நிலையில், இரண்டாம் பாகத்தில்தான் அவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெறுகிறதாம். மேலும், சாய் பல்லவி சீதையாக நடிக்கும் இந்த படத்தில் சன்னி தியோல், விவேக் ஓபராய், ரவி துபே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.