பிரதீப் ரங்கநாதன் டிரெண்ட் படங்களை விட்டு வெளிவருவாரா?
ADDED : 14 hours ago
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகராக 'லவ் டுடே, டிராகன், டூட்' என ஹாட்ரிக் வெற்றிக் படங்களை தந்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழ்நிலையில் உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த நான்கு படங்களும் '2கே, ஜென் சி' ரசிகர்களைக் குறிவைத்து டிரெண்ட் படங்களாக நடித்துள்ளார். இதற்கு மேல் பிரதீப் முன்னிலையில் உள்ள சிக்கல் என்னவென்றால் இந்த டிரெண்ட் 2கே, ஜென் சி கதையம்சம் கொண்ட படங்களை தள்ளி வைத்து வேறு ஜானரில் நடித்து அதில் வெற்றி பெற்றால் தான் ஒரு ஸ்டார் ஆக அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என பொதுவான கருத்து எழுந்துள்ளது.