உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி

'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி


பாரதிராஜா இயக்கத்தில் 'கிழக்கே போகும் ரயில்' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா. அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடித்து வந்த ராதிகா இதுவரை தேசிய விருதினை வென்றதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சிவகுமார் முருகேசன் எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த 'தாய் கிழவி' படத்தில் ராதிகா முதிய தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை பிரச்னையால் ஓய்வெடுத்து வரும் இயக்குனர் பாரதிராஜா, தாய் கிழவி படத்தை பார்த்துள்ளார். பார்த்ததுடன் ராதிகாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பாரதிராஜாவை நலம் விசாரிக்கும் ராதிகா, தாய் கிழவி படம் பார்த்தீங்களாமே என்று கேட்க, ஆமாம் பார்த்தேன். இந்த படத்திற்கு உனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொல்ல, அதை ஆச்சரியமாக கேட்கும் ராதிகா, அப்படியா, கிடைக்கட்டும். இதை உங்கள் காலடியில் வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !