வாசகர்கள் கருத்துகள் (1)
அதுதான் உண்மை
உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்த 'டிஎன் 2026' படம் கடந்த 10ந் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ளார். அரசியல், நகைச்சுவை கதை களத்தில் வெளியான இந்த படத்தில் இன்றைய காலகட்டத்தில் நடக்கிற அரசியலை கிண்டல் செய்தது. குறிப்பாக ரஜினி அரசியலை விட்டு விலகியதையும், விஜய் அரசியலில் குதித்திருப்பதையும் இந்த படம் கடுமையாக விமர்சித்தது. இருவரின் கேரக்டரிலும் நட்டி நட்ராஜ் நடித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் நட்டி நட்ராஜை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் நட்டி தனது எக்ஸ் தளத்தில், “விஜய்தான் அடுத்த முதல்வர்” என பதிவிட்டுட்டுள்ளார். தற்போது விஜய் ரசிகர்கள் நட்டியை பாராட்டி வருகிறார்கள். மற்றவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
அதுதான் உண்மை