உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் மங்கத்தா 2 உருவாகிறதா? : வெங்கட்பிரபு படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பாரா?

அஜித்தின் மங்கத்தா 2 உருவாகிறதா? : வெங்கட்பிரபு படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பாரா?

சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண இருந்தார் வெங்கட்பிரபு. அந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. சில மாதங்களாக அந்த படத்தின் முன்னேற்பாடு வேலைகள் நடந்தன. ஆனால், திடீரென கமல்ஹாசன் தயாரிக்க, தாய்கிழவி இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கும் சேயோன் படத்துக்கு சென்றுவிட்டார் சிவகார்த்திகேயன். இதனால் சில மாதங்கள் வெங்கட்பிரபு காத்திருக்க வேண்டிய நிலை, ஒரு சிலர் அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில், அஜித்தை வைத்து படம் இயக்க தயாராகிறாராம் வெங்கட்பிரபு. மங்கத்தா 2வை எடுக்கலாம் என நினைக்கிறாராம். அஜித் அவருக்கு கால்ஷீட் கொடுக்க தயார் என்றாலும், அந்த படத்தை தயாரிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, அஜித்தின் அதிக சம்பளம் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் படம் தயாரிப்பாளர் கிடைக்காமல் தத்தளித்து வருகிறது. அஜித்தை வைத்து படம் இயக்க சிவா, ஏ.எல்.விஜய், எச்.வினோத் உள்ளிட்ட சிலரும் தயாராக இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !