எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் சாய் பல்லவிக்கு பதிலாக ருக்மணி வசந்த்!
தமிழில் 'ஏஸ், மதராஸி' போன்ற படங்களில் நடித்த கன்னட நடிகை ருக்மணி வசந்த், 'காந்தாரா சாப்டர்-1' படத்தை அடுத்து தற்போது 'டாக்ஸிக்' படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அதையடுத்து தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் 'டிராகன்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் கவுதம் தின்னனூரி, அப்படத்தில் நடிக்க சாய் பல்லவியை நடிக்க வைக்கப்போவதாக முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க ருக்மணி வசந்த்தை அவர் ஒப்பந்தமாக்கி இருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான 'சப்த சாகரலு தாட்டி எல்லா' என்ற படத்தில் ருக்மணி வசந்த்தின் மிகச்சிறப்பான நடிப்பைப் பார்த்து அசந்துபோன இயக்குனர் கவுதம் தின்னனூரி இப்படத்துக்கு ருக்மணி வசந்ததை ஒப்பந்தம் செய்துள்ளாராம். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.