உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு' ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

'கருப்பு' ரிலீஸ் தள்ளிப் போகிறதா?


ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருப்பு'. இப்படம் மே 14ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். ஆனால், நேற்று மதுரையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரிலீஸ் தேதியை எங்குமே பார்க்க முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இப்படத்தின் ரிலீஸ் தேதி படத்தின் போஸ்டர்களில் இடம் பெற்றிருந்தது. ஆனால், நேற்று வெளியான ஆடியோ ரிலீஸ் போஸ்டர்களில் தேதி எதையும் குறிப்பிடாமல் மே 2026 ரிலீஸ் என்று மாற்றி உள்ளார்கள். இதனால், மே 14ம் தேதியிலிருந்து படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளார்கள் என்று தெரிகிறது.

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்துவிட்டால் அப்படத்தை மே 7 அல்லது 14ல் வெளியிடும் முடிவில் இருக்கிறார்களாம். அதனால், அப்படத்துடன் போட்டியிட வேண்டாம் என 'கருப்பு' வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஏற்கெனவே அறிவித்து இப்போது மே 2026 என தேதி குறிப்பிடாமல் போஸ்டர்களை வெளியிடுவது சூர்யா ரசிகர்களை கோபப்பட வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !