உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரமின் செயலால் 6 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்த விழிப்புணர்வு செய்தி

விக்ரமின் செயலால் 6 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்த விழிப்புணர்வு செய்தி

கேரள போலீசார் பொதுமக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சோசியல் மீடியாவில் அவ்வப்போது விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். குறிப்பாக சினிமாவில் இருக்கும் பிரபலமான காட்சிகளை எடுத்து அவற்றை தங்களது பிரச்சாரங்களுக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போதை பொருள் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறை எப்போதும் உங்களை தீவிரமாக கண்காணிக்கிறது என்பதை சொல்வதற்காக ஒரு வீடியோ வெளியிட்டார்கள்.

அதில் மலையாளம் நடிகர் ஜிபின் கோபிநாத்தை வைத்து சில காட்சிகளை படமாக்கி அவற்றுடன் விக்ரம் நடித்த ஒரு படத்தின் சில காட்சிகளை எடுத்து இணைத்து பொருத்தமான விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இது எப்படியோ நடிகர் விக்ரமின் பார்வைக்கும் சென்றதும் அதை ரசித்த விக்ரம் அதை உடனே தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரீ போஸ்ட் செய்தார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளார்கள். தானாகவே முன்வந்து விக்ரம் செய்த இந்த செயல் குறித்து கேரள போலீஸ் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !