உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் நுழைந்த ரித்திகா சிங், அமைரா தஸ்தூர்

மலையாளத்தில் நுழைந்த ரித்திகா சிங், அமைரா தஸ்தூர்


மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ட்ரால் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் 'ஆபரேஷன் ட்ரால்'. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கொச்சியில் பிரம்மாண்டமான பூஜையுடன் நேற்று துவங்கியது. பிரபல இசையமைப்பாளர் ரதீஷ் வேகா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிப்பதன் மூலம் 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் மற்றும் 'அனேகன்' பட நாயகி அமைரா தஸ்தூர் இருவரும் மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளனர். இதற்கு முன்னதாக ரித்திகா சிங் கடந்த 2023ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கிங் ஆப் கொத்த' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் என்பதும் 2024ல் வெளியான 'வேட்டையன்' படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !