உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிலத்தகராறு பின்னணியில் உருவானது தான் 'திரிஷ்யம்' படத்தின் கதை ; இயக்குனர் ஜீத்து ஜோசப்

நிலத்தகராறு பின்னணியில் உருவானது தான் 'திரிஷ்யம்' படத்தின் கதை ; இயக்குனர் ஜீத்து ஜோசப்


மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியான 'திரிஷ்யம்' மற்றும் 2021ல் வெளியான 'திரிஷ்யம் 2' என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனைத் தொடர்ந்து திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் வரும் மே 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இது ஏதோ ஒரு கொலை வழக்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை இல்லை என்றும் இதன் கதை எப்படி உருவானது என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.

“கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் ஜீத்து ஜோசப்பின் சொந்த ஊரில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு ஒன்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள ஒரு நபரை தற்செயலாக தாக்கினார்களாம்.. அந்த சம்பவத்தை நேரில் கவனித்த ஜீத்து ஜோசப் ஒருவேளை அந்த நபர் தாக்குதலில் இறந்திருந்தால் அந்த சாதாரண குடும்பம் தங்களை காப்பாற்றிக்கொள்ள என்ன செய்திருக்கும், அந்த தவறை மறைக்க அவர்கள் எந்த எல்லை வரை சென்றிருப்பார்கள் என்று சிந்திக்க தொடங்கியதுதான் திரிஷ்யம் படத்தின் கதைக்கான அஸ்திவாரம் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல இந்த யோசனை அவரது மனதில் பல வருடங்களாக இருந்ததாகவும் 2011ம் ஆண்டில் தான், ஒரு நடுத்தர குடும்பம் இதுபோன்று ஒரு கொலை சம்பவத்தில் மாட்டிக்கொண்டால் அதை எப்படி மறைக்கிறார்கள் என்று எழுத ஆரம்பித்து, அதன்பிறகு காவல்துறையின் தீவிர விசாரணையில் இருந்து நாயகன் எப்படி தன் குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்பதாகவும் கதையை விரிவுபடுத்தியதாக கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !