வாசகர்கள் கருத்துகள் (1)
Ajit the All rounder
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், கார் ரேஸிங்கில் சர்வதேச அளவில் பங்கேற்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அஜித் பற்றிய தனிப்பட்ட வீடியோக்கள் சில அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும். அப்படி அவர் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, கீப்பிங் என அனைத்தையும் செய்யும் அவரது கிரிக்கெட் திறமை ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சிறப்பான ஆக்ஷனுடன் அவர் பவுலிங் செய்வதும், ஸ்டைலான பேட்டிங் ஸ்ட்ரோக்கும் ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு உள்ளது. விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர் அஜித் என்பது தெரிந்ததுதான். அவருடைய கிரிக்கெட் வீடியோ வெளியாவதுதான் இதுதான் முதல் முறை.
Ajit the All rounder