உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வாரண்ட்' வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

‛வாரண்ட்' வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்


திரைப்படங்களில் சென்சாருக்கு உட்பட்டு தாங்கள் சொல்ல நினைத்த பல விஷயங்களை, பல வசனங்களைப் பல இயக்குனர்களால் சொல்ல முடியாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட பலருக்கும் வெப் சீரிஸ்கள் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கின்றன. காரணம் அதற்குத் தணிக்கை இல்லை என்பதுதான். அதனாலேயே பல வெப் சீரிஸ்களில் பொதுவெளியில் பயன்படுத்தப்படும் ஆபாச மற்றும் அநாகரிக வார்த்தைகள் அவ்வப்போது ரசிகர்களை ஈர்க்கிறோம் என்கிற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சமீபத்தில் ‛விலங்கு' வெப்சீரிஸ் மற்றும் ‛மாமன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‛வாரண்ட்' என்கிற வெப்சீரிஸ் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகளைச் சர்வசாதாரணமாக படத்தின் நாயகனும் இன்னும் ஒரு சில கதாபாத்திரங்களும் பேசுகின்றனர். இத்தனைக்கும் நாயகன் உள்ளிட்ட பலரும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏதோ ஒன்று, இரண்டு இடங்கள் என்றால் பரவாயில்லை, கிட்டத்தட்ட 8 எபிசோடுகளிலும் காது கூசும் அளவிற்குச் சர்வசாதாரணமாக இந்த வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறார்கள்.. மாமன் போன்ற குடும்பப்பாங்கான படத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் ஒரு நடிகராக மாறும்போது இதையெல்லாம் கவனித்துக் கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டாமா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புவதைப் பார்க்க முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !