உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி


எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனாட்சி சேஷாத்திரி. 1983ல் ‛பெயிண்டர் பாபு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு ‛ஹீரோ, தாமினி' உள்ளிட்ட படங்களின் மூலம் மிகப் பிரபலமான நடிகையாக மாறினார். தமிழில் கூட பாக்கியராஜுடன் ‛என் ரத்தத்தின் ரத்தமே' மற்றும் பிரபுவுடன் ‛டூயட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருந்தபோதே ஹரிஷ் மைசூர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதுடன், அடிப்படையில் பரதநாட்டியக் கலைஞரான அவர் அங்கே நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தான் தற்போது 30 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ள அவர், இதற்காக மும்பையில் வீடு பார்த்துப் குடிபுகுந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மிகப்பெரிய கதாபாத்திரமோ அல்லது சிறிய கதாபாத்திரமோ எதுவாக இருந்தாலும் பார்ப்பவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் மட்டுமல்ல ஓடிடி தொடர்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கென எந்த ஏஜென்டோ, பி.ஆர். நிறுவனங்களோ இல்லாமல் நானே தனியாக வாய்ப்புகளைத் தேடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் மீனாட்சி சேஷாத்திரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !