உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்!

160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்!


'பாகுபலி' படத்திற்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாகிவிட்டார் பிரபாஸ். இந்த ஆண்டு அவர் நடிப்பில் 'தி ராஜா சாப்' என்ற படம் வெளியாகி தோல்வி அடைந்து விட்டது. தற்போது 'கல்கி-2 , ஸ்பிரிட், பவுஸி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்டமான சொகுசு பங்களா கட்டி வருகிறார் பிரபாஸ். 160 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த பங்களாவில் மினி தியேட்டர், நீச்சல் குளம், ஜிம்னாஸ்டிக் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இந்த பங்களா குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !