உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப்

12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப்


கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் கடந்த வருடம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான 'மேக்ஸ்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்து அவரது படமாக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் 'பில்லா ரங்கா பாஷா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது என்றும், இந்த வருடத்திலேயே அந்த படத்தை வெளியிடுவதற்கான வேலைகளை விரைவாக திட்டமிட்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம் சுதீப் தற்போது ஒரே நேரத்தில் நான்கு விதமான ஜானர்களில் புதிய கதைகளை உருவாக்கி வருவதாகவும், அவற்றில் ஒன்றை அவரே இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு டைரக்ஷன் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே ஆறு படங்களை இயக்கியுள்ள சுதீப், கடந்த 2014ல் 'மாணிக்யா' என்கிற படத்தை இயக்கியிருந்தார். இது தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'மிர்ச்சி' படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது. தற்போது 12 வருடங்கள் கழித்து மீண்டும் சுதீப் டைரக்ஷனுக்கு திரும்ப இருக்கிறார் என்கிற தகவல் தற்போது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !