உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள்

எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள்


இந்த வாரம் தமிழில் அர்ஜுன் நடித்த 'பிளாஸ்ட்' என்கிற படம் மட்டுமே வெளியாகிறது. அதே சமயம் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'காட்டாளன்' என்கிற திரைப்படமும் தமிழில் வெளியாக இருக்கிறது. இதில் அங்கமாலி டைரீஸ் புகழ் நடிகர் ஆண்டனி பீப்பி வர்கீஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் பால் ஜார்ஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளியாக உள்ள நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி படம் முடிந்தவுடன் உடனே திரையரங்கில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும், படத்தில் மொத்தம் மூன்று போஸ்ட் கிரெடிட் காட்சிகள், அதாவது முக்கியமான காட்சிகள் இருப்பதாகவும், அதில் இரண்டு காட்சிகள் டைட்டில் கார்டுகள் ஓடும்போதே வரும் என்றும், கடைசி முக்கியமான காட்சி எண்ட் கார்டு முடிந்த பிறகு திரையிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் இந்த படம் குறித்த முக்கியமான விஷயமோ அல்லது இரண்டாம் பாகத்திற்கான ஒரு லீடோ ஏதோ ஒன்று இருக்கலாம் என்பதால் தான் இந்த அறிவிப்பை படக்குழுவினர் வேண்டுகோளாக வெளியிட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !