உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 6 இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்துள்ள இயக்குனர் சசி

6 இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்துள்ள இயக்குனர் சசி

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி ஒரு அறிமுகம் நடந்துள்ளதா என்பது ஆச்சரியம்தான். அதிகமான நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர்கள் இருப்பார்கள். ஆனால், ஐந்து இசையமைப்பாளர்களை ஒரு இயக்குனர் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்றால் அது முற்றிலும் ஆச்சரியம்தான்.

1998ல் வெளிவந்த 'சொல்லாமலே' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசி. அப்டத்திற்குப் பிறகு தமிழில் 'ரோஜா கூட்டம், டிஷ்யும், பூ, 555, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை' ஆகிய படங்களை இயக்கினார்.

ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'நூறு சாமி' படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் அடுத்த வாரம் ஜூன் 19ம் தேதி வெளியாக உள்ளது.

நேற்று நடைபெற்ற இப்படத்தின் விழாவில் 'நூறு சாமி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ள பாலாஜி ஸ்ரீராம் என்ற இளம் இசையமைப்பாளரை சசி இதற்கு முன் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர்கள் மேடையில் அறிமுகம் செய்து வைத்தனர்.

இதுவரையில் 8 படங்களை மட்டுமே தமிழில் இயக்கியுள்ள சசி, 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது முதல் படமான 'சொல்லாமலே' படத்தில் பாபி இசையமைப்பாளராக அறிமுகமானார்.

2006ல் சசி இயக்கத்தில் வெளிவந்த 'டிஷ்யும்' படம்தான் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பாடல்களை ஒலிப்பதிவு செய்தார். ஆனால், 'சுக்ரன்' படம் முதலில் வந்துவிட்டது.

'பூ' படத்தில் எஸ்எஸ் குமரன், '555' படத்தில் சைமன் கே கிங், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் சித்து குமார் ஆகியோரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய சசி அடுத்து 'நூறு சாமி' படத்தில் பாலாஜி ஸ்ரீராமை இசையமைப்பாளராக அறிமுகம் செய்கிறார்.

நேற்றைய விழா மேடையில் 'சொல்லாமலே' இசையமைப்பாளர் பாபி தவிர மற்றவர்கள் வந்து மேடையேறி வாழ்த்தினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !