ஆர்.ஜே.பாலாஜிக்கு கார் பரிசளித்த சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவான படம் கருப்பு. மே 15ல் திரைக்கு வந்த இந்தப் படம் இதுவரை 340 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தனது கேரியரில் அதிகப்படியாக இந்த படம் வசூல் சாதனை செய்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்த சூர்யா, இந்த கருப்பு படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோருக்கு கார் பரிசளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கருப்பு இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜிக்கும் ஒரு கார் பரிசளித்திருக்கிறார். இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், இந்த படம் தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அந்த நம்பிக்கை தான் கனவை நனவாக்கியுள்ளது. அந்த ஒரு ஆதரவு என் வாழ்வில் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியாக தொடங்கிய ஒன்று இன்று ஒரு மாபெரும் வெற்றி படமாக நிஜமாகி உள்ளது. இவை அனைத்தும் அந்த ஒரே ஒரு நபர் இல்லாவிட்டால் சாத்தியமாகி இருக்காது என்று பதிவிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.