ஜூன் 19ல் 5 படங்கள் ரிலீஸ்
2026ம் ஆண்டில் கடந்த வாரம் ஜூன் 12ம் தேதியுடன் மொத்தம் 108 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் 8 படங்கள் வெளியாகின. அவற்றிற்கும் குறிப்பிடும்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு சில படங்களுக்கு மட்டும் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த வாரம் ஜுன் 19ம் தேதி, “டார்க் ஜெயன்ட், மக்கள் தலைவன், மனு, பதினென் கீழ்க்கணக்கு, நூறு சாமி” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'நூறு சாமி' படம் மட்டும்தான் ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள் நடித்துள்ள ஒரு படமாக உள்ளது.
'பிச்சைக்காரன்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம். ஸ்வாசிகா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தைப் பார்த்த திரையுலகினர் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறுகின்றனர்.
இந்த வாரத்தைப் போலவே அடுத்த வாரம் ஜுன் 25 மற்றும் 26 தேதிகளிலும் நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளன. வரும் வாரங்களில் ஒவ்வொரு வாரமும் படங்கள் வெளியாகின்றன. தொடர்ந்து புதிய படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.