உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் நிறுவனத்தின் அடுத்தடுத்த 2 படங்களில் ஒப்பந்தமான பஹத் பாசில்

பாலிவுட் நிறுவனத்தின் அடுத்தடுத்த 2 படங்களில் ஒப்பந்தமான பஹத் பாசில்

சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் பார்வதி ஆகியோரை வைத்து மலையாளத்தில் திரைப்படத்தை தயாரிக்கும் விதமாக அடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த பரபரப்பாக, சமீபத்தில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 3 மற்றும், தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் திரிஷ்யம் 3 ஆகிய படங்களையும் தயாரித்து வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் நடிகர் பஹத் பாசிலை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை மலையாளத்தில் தயாரிக்க இருக்கிறது. இது குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது..

இந்த படங்களில் நடிப்பது குறித்து பஹத் பாசில் கூறும்போது, இந்த இரண்டு படங்களின் கதைகளும், அதன் பின்னணியில் உள்ள படைப்பு சிந்தனையும் தான் என்னை இதில் நடிப்பதற்காக ஈர்த்தது. நடிகராக எனக்கு சவால் விடுகின்ற மற்றும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருகின்ற கதைகளை நான் எப்போதுமே விரும்புவேன் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !