உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாஸ் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் மனு

பாஸ் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் மனு

பிரபலங்களின் வாழ்க்கையில் நடைபெற்ற பிரச்சனைகளை சினிமா ஆக்குவதற்கென்றே ஒவ்வொரு திரைப்பட துறைகளிலும் சிலர் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே சல்மான் கானின் மான் வேட்டை வழக்கை மையப்படுத்தி ஹிந்தியில் காலா கிரண் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை வெளியிடக்கூடாது எனக் கூறி சல்மான்கான் தற்போது நீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்கால தடை பெற்றுள்ளார். இதேபோல தான் தற்போது கர்நாடகாவில் அங்குள்ள பிரபல நடிகர் சந்தித்து வரும் பிரச்சினை ஒன்றை வைத்து பாஸ் என்கிற திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கன்னட திரை உலகின் பிரபல நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக தனது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட பலருடன் தற்போது சிறையில் இருக்கிறார். இதை மையப்படுத்தி தற்போது பாஸ் என்கிற திரைப்படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், தற்போது இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் நிலையில் இந்த சம்பவங்கள் மையப்படுத்தி படம் இருப்பது மற்றும் தன்னை போன்ற நபரை கழுத்தில் சித்தரிப்பது போன்ற காட்சிகள் தங்களது சட்ட போராட்டத்தை பாதிக்கும் என்று கூறி தனது மனைவி விஜயலட்சுமியுடன் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜூன் 19 (நாளை) இந்த பாஸ் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தர்ஷனின் இந்த புதிய மேல்முறையீட்டு மனுவால் மீண்டும் தள்ளிப்போகுமா அல்லது திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற பரபரப்பும் எதிர்பார்ப்பும் கன்னட திரை உலகில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !