அனந்தன் காடு படத்தில் சர்ச்சையா : தயாரிப்பாளர் விளக்கம்
அனந்தன் காடு என்ற மலையாள படத்தில் ஆர்யா, கருப்பு படத்தின் மூலம் பிரபலமான இந்திரன்ஸ் நடிக்கிறார்கள். ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் மலையாளம், தமிழில் தயாராகி உள்ளது. திருவனந்தபுரத்தில் கதை நடக்கிறது. அதனால், தமிழ் கேரக்டர்கள் தமிழில் பேசியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் இது தமிழர்களுக்கு எதிரான படமா என்று கேள்வி எழுப்ப, இந்த படத்தின் கதையில் இலங்கையை சேர்ந்த ஒரு குழு குறித்து காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை. தமிழர்களுக்கு எதிரானக எந்த காட்சியும் இல்லை. வசனத்தில் இடம் பெற்ற ஒரு வார்த்தை கூட, அந்த குழுவுக்கு எதிரான ஒரு வெளிநாட்டவர் பேசுவதாக இருந்தது. முறைப்படி சென்சார் வாங்கிவிட்டோம். அடுத்த வாரம் படம் பார்த்தால் இந்த படத்தின் கதை, கருத்து புரியும் என படக்குழு கூறியுள்ளது.
நடிகர் தனுஷ் மானேஜராகவும், அவரின் வுண்டர்பார் நிர்வாகியாகவும், விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தை தயாரித்தவருமான வினோத் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜூன் 25ல் படம் ரிலீஸ். நிகிலா விமல், ரெஜினா முக்கிய வேடத்தில் நடிக்க, ஆக் ஷன் பின்னணியில் கதை நடக்கிறது.
கருப்பு படத்திற்கு முன்பே இந்த படத்தில் நடித்தேன். இதில் மாறுபட்ட வேடம் என்று இந்திரன்ஸ் கூறியுள்ளார். அனந்தன் காடு என்பது திருவனந்தபுரத்தின் பழங்கால பெயராம்.