விஜய் ரசிகர்களுக்குக் கிடைக்காமல் போன பிறந்தநாள் பரிசு
தமிழக முதல்வராக தனது முதல் பிறந்தநாளை விஜய் நேற்று கொண்டாடினார். தீவிர அரசியலில் இறங்குவதற்காக அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவரது கடைசி படமாக 'ஜனநாயகன்' படம் தயாரானது. அப்படம் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காதததால் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.
இன்னும் சான்றிதழ் கிடைக்காமல் சுமார் ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. விஜய் முதல்வராகப் பதவியேற்ற பின் அந்த சான்றிதழ் கிடைத்துவிடும். உடனே படத்தை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இதுவரையில் படத்தின் அறிவிப்பைக் கூட வெளியிடாமல் இருக்கிறார்கள். சென்சார் சான்றிதழ் நிலை என்ன என்பதும் யாருக்கும் தெரியவில்லை.
படத்தின் தயாரிப்பாளர் ஓரிரு வாரங்களுக்கு முன்பு டில்லி சென்றதாகவும் சொன்னார்கள். அதனால், விஜய்யின் பிறந்தநாளான நேற்று 'ஜனநாயகன்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு அவரது பிறந்தநாள் பரிசாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், நேற்று இரவு வரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.