அடுத்து ரிலீசாகும் மனைவி - கணவன் படங்கள்
ADDED : 15 hours ago
பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி, கடந்த வருடம் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது கணவர் சித்தார்த் மல்கோத்ராவும் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில், கியாரா அத்வானி கன்னடத்தில் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஆச்சரியமாக, தற்போது அவரது கணவர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள 'வான் ; போர்ஸ் ஆப் தி பாரஸ்ட்' (Vvan Force Of The Forest) என்கிற படம் ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது. இப்படி கணவன்-மனைவி இருவரும் தனித்தனியாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாவது ஆச்சரியமான விஷயம்தான்.