உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜயின் பட தயாரிப்பாளருக்கு டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி

முதல்வர் விஜயின் பட தயாரிப்பாளருக்கு டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜயின் ‛ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. இதை கர்நாடகாவை சேர்ந்த கேவிஎன் நிறுவனத்தை சேர்ந்த வெங்கட் நாராயணா தயாரித்துள்ளார். கடந்த ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் தற்போது வரை வெளியாகவில்லை. விஜய் முதல்வரான பின்னர் வெளியாகும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. கடந்தவாரம் தயாரிப்பாளர் தணிக்கை விஷயமாக டில்லியில் முகாமிட்டு இருந்தார். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக டில்லியில் சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவது வழக்கம். இது, அமைச்சர் பதவிக்கு இணையானது. அந்த வகையில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தமிழக அரசு நியமித்துள்ளது. இது அரசியல் வட்டாரம் மற்றும் திரையுலகினர் இடையே ஆச்சர்யத்தையும், அதேசமயம் கொஞ்சம் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளருக்கு இவ்வளவு முன்னுரிமை ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

முன்னதாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கவர்னரை விஜய் சந்தித்த சமயத்திலும் ஜனநாயகன் தயாரிப்பாளர் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !