எல்லை மீறாத கவர்ச்சி தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங்
ADDED : 7 hours ago
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தியில் நடிக்கிறார். திருமணத்திற்கும் பிறகும் பிஸியாக நடிகையாக வலம் வரும் வருகிறார். அதோடு பேஷன் நிகழ்வு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் சற்று கிளாமரான உடையிலும் வலம் வருகிறார். சமயங்களில் இது விமர்சனமும் ஆகிறது.
இதுபற்றி ரகுல் கூறுகையில், ‛‛நடிகைகளின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் திருமணம் தடையாக இருக்காது. திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமாக பயணிக்க முடியும். அதேப்போல் கவர்ச்சி விஷயத்தில் அதை தவறாக பார்க்காமல் கலையின் வெளிப்பாடாக பார்க்கும் மனப்பான்மை உருவாக வேண்டும். கவர்ச்சியில் எல்லை மீறாத வரை தவறில்லை'' என்கிறார்.