நிவின்பாலியின் 50வது பட டைட்டில் அறிவிப்பு
கடந்த 2010ல் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்கிற படத்தில் அறிமுகமான நடிகர் நிவின்பாலி, இந்த 16 வருடங்களில் தற்போது தனது ஐம்பதாவது படம் என்கிற மைல்கல்லை எட்டியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு நிவின்பாலிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த 'நேரம், பிரேமம்' படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் நிவின்பாலியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு 'விஜயம்' என டைட்டில் வைக்கப்பட்டு, படத்தின் நான்கு நிமிட விறுவிறுப்பான டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வழக்கமான அறிவிப்பு வீடியோவாக இல்லாமல், அல்போன்ஸ் புத்திரனின் தனித்துவமான நகைச்சுவை மற்றும் அவரது பாணியில் ஒரு குறும்படம் போல உருவாக்கப்பட்டுள்ளது.