உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆவேசம்' பட பாணியில் சூர்யா படத்திலும் சுவாரஸ்யம் ; இசையமைப்பாளர் அப்டேட்

'ஆவேசம்' பட பாணியில் சூர்யா படத்திலும் சுவாரஸ்யம் ; இசையமைப்பாளர் அப்டேட்


சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் விரைவில் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இவர் கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆவேசம்' படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டானதில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.

அந்த வகையில், தற்போது சூர்யாவின் 47வது படத்திற்கும் அவரே இசையமைக்கிறார். இவர் தமிழில் இசையமைக்கும் முதல் படமும் இதுதான். இந்த நிலையில், சமீபத்தில் இந்தப் படம் பற்றி சுஷின் ஷ்யாம் கூறும்போது, இது ஒரு அதிரடி திரைப்படம். 'ஆவேசம்' திரைப்படத்தில் இருந்தது போன்ற சில சுவாரசியமான அம்சங்களும் இதில் இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இந்தப் படம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !