உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஓ சுகுமாரி' படம் ஜூலை 17ல் வெளியாகிறது!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஓ சுகுமாரி' படம் ஜூலை 17ல் வெளியாகிறது!


திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் 'ஓ சுகுமாரி'. இப்படம் கிராமப்புற காதல் மற்றும் பொழுதுபோக்கு கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார் பரத் தர்ஷன். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீது ஒரு பாசிட்டிவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ தியேட்டர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இப்படம் ஜூலை 17ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக படக்குழுவினர் ஒரு அழகான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் பசுமையான பின்னணி மற்றும் மேகமூட்டங்களுக்கு இடையே திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உடையில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திரு வீரின் கையை நோக்கித் தன் கையை நீட்ட, இருவரின் விரல் நுனிகளுக்கு இடையே ஒரு மின்னல் கோடு இணைப்பது போல அந்த போஸ்டர் அமைந்துள்ளது. இது கதையின் மையமாக இருக்கும் ஒரு மேஜிக் மற்றும் காதல் கூறுகளை சூசகமாக உணர்த்துகிறது.

இப்படம் தவிர, இசக பட்னம் என்ற வெப் சீரியலில் சமுத்திரக்கனியுடன் இணைந்து முதன்மை வேடத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது ஒரு க்ரைம் டிராமா தொடர் ஆகும். ஒரு துறைமுக நகரத்தின் பின்னணியில் தந்தையான சமுத்திரக்கனிக்கும், மகளான ஐஸ்வர்யா ராஜேஷூக்குமிடையே நடக்கும் அதிகாரப் போராட்டமே இதன் கதை. கேரி பி.எச் இயக்கியுள்ள இந்த 7 எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஜூலை 2ம் தேதியான நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !