'கட்டா குஸ்தி 2' படத்தால் ஏற்பட்ட மாற்றம்: திருமணம் பற்றி மனம்மாறிய ஐஸ்வர்யா லட்சுமி
மலையாளத்தில் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக 'கட்டா குஸ்தி 2' படத்தில் நடித்துள்ளார். நாளை இப்படம் ரிலீசாகிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் திருமணம் குறித்து பேசுகையில், திருமணம் என்ற உறவுக்குள் நுழைவதில் தனக்கு பல குழப்பங்களும், தயக்கங்களும் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் 'கட்டா குஸ்தி 2' படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து பேட்டியளித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமியிடம் மீண்டும் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: 'கட்டா குஸ்தி-2' படத்தில் ஒரு குழந்தையுடன் நெருக்கமாக நடித்தபோது, எனக்குள் இருந்த தாய்மை உணர்வு விழித்தெழுந்தது. அதன்பிறகு திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் துவங்கினேன். என் வாழ்க்கைத் துணையாக வருபவர் எனக்கு நல்ல கணவராக மட்டுமல்ல, என் குழந்தைக்கு நல்ல தந்தையாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் என்னால் புரிந்துகொள்ளக்கூடிய, நம்பிக்கையுடன் வாழ்க்கையைப் பகிரக்கூடிய ஒருவரைத் தான் நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.