அக்டோபர் 15ல் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 5 hours ago
'ஜெயிலர்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் நெல்சன் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர் 2'. இதில் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இதிலும் நடிக்கின்றனர். கூடுதலாக எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு இந்த தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் டீசர், டிரைலர், பாடல்கள் ரிலீசாகின்றன.