உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் தடம் பதிக்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்

தெலுங்கில் தடம் பதிக்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்

தமிழ் சினிமாவிலிருந்து மற்ற மொழிகளுக்கு செல்பவர்களில் ஒளிப்பதிவாளர்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள். தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்கள் என்றால் அவர்களுக்கென தனி அங்கீகாரம் உண்டு.

தற்போது இசையமைப்பாளர்களும் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். சமீப காலங்களில் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் பலருக்கும் தெலுங்கில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

முந்தைய இசையமைப்பாளர்களில் இளையராஜா போன்று வேறு யாரும் அவ்வளவு ஹிட் கொடுத்ததில்லை என்று சொல்லலாம். 80, 90களில் தமிழைப் போலவே தெலுங்கிலும் பல படங்களில் அவருடைய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

தற்போது அனிருத், ஜிவி பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் என பலரும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள்.

அனிருத் 'தி பாரடைஸ், படத்திற்கு இசையமைத்து வருகிறார். அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் இணையும் ஏஏ 23 படத்திற்கும், திரிவிக்ரம் சீனிவாஸ், ஜூனியர் என்டிஆர் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜிவி பிரகாஷ்குமார் 'இருமுடி' படத்திற்கு இசையமைத்து வருகிறார். அனில் ரவிப்புடி - வெங்கடேஷ் இணைந்து உருவாகும் 5வது படத்திற்கும் இசையமைக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மா இன்ட்டி பங்காரம்' படத்திற்கு இசையமைத்தார். அடுத்து 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாகம் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சாய் அபயங்கர் அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் 'ராக்கா' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளிவந்த ராம் சரண் நடித்த 'பெத்தி' படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அட்லீ, ராக்கா ஆகிய இருவருக்கும் தான் பான் இந்தியா படங்களில் போட்டி ஏற்பட்டுள்ளது.

ராம் பொத்தினேனி ஹீரோவாக நடித்து, இயக்கும் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

தமிழ் இசையமைப்பாளர்களுக்கு தெலுங்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முக்கியத்துவம் கொடுத்து வருவது அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !