ராம் பொத்தினேனி இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்
ADDED : 4 hours ago
தெலுங்கு திரை உலகில் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவராக வலம் வருபவர் ராம் பொத்தினேனி. வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வரும் இவருக்கு, கடந்த வருடங்களில் வெளியான 'டபுள் ஐ ஸ்மார்ட்' மற்றும் 'ஆந்திரா கிங் தாலுகா' ஆகிய படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில், தனது இடத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக முதன்முறையாக தானே டைரக்ஷனில் இறங்கியிருக்கிறார் ராம் பொத்தினேனி.
அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமே இதைத் தயாரிக்கிறது. 'தி ஸ்டோரி ஆப் எ லோன் வுல்ப்' (The Story of a Lone Wolf) என்கிற டேக்ளைனுடன் ஒரு சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் சாம் சி.எஸ். இப்படத்திற்காக இசையமைக்கும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சாம் சி.எஸ்.