உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''உங்கள் கணவரை காதலியுங்கள்'': ரசிகைக்கு ஷாருக்கான் அட்வைஸ்

''உங்கள் கணவரை காதலியுங்கள்'': ரசிகைக்கு ஷாருக்கான் அட்வைஸ்


தமிழகத்தில் நடிகர் விஜய் பிரசாரம் செய்த போது ஒரு பெண் 'என் புருஷனை விட எனக்கு விஜய் தான் ரொம்ப பிடிக்கும்' என்று பேசியது அப்போது பரபரப்பானது. இது குறித்து விஜய் எந்த கருத்தும் சொல்லவில்லை.

இதே போன்ற ஒரு சம்பவம் ஷாருக்கானுக்கும் நிகழ்ந்துள்ளது கர்நாடக மாநிலம், மங்களூருவில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்கு அவர் நடனமாடியும், ரசிகர்களுடன் உரையாடியும் மகிழ்ந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த இளம் ரசிகை ஷாருக்கான், என் கணவரை விட நான் உங்களை அதிகம் காதலிக்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த அவர், இது வெறும் பேச்சிற்காக சொல்லப்பட்ட வார்த்தை என்பது எனக்குத் தெரியும். உங்கள் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் கணவரும் இதைப் புரிந்துகொள்வார் என உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். உங்கள் கணவரையும், குடும்பத்தினரையும் நான் நேசிக்கிறேன். உங்கள் கணவருக்கு நீங்கள் லவ் யூ சொல்லுங்கள். மிக்க நன்றி என்றார். ஷாருக்கானின் இந்த பதில் தற்போது வைரல் ஆகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !