ஸ்பைடர் மேனாக தலைகீழாக போஸ் கொடுக்கும் அபிராமி! வைரலாகும் வீடியோ!
செகண்ட் இன்னிங்ஸில் கிடைக்கிற வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொண்டு வரும் அபிராமிக்கு அர்ஜுன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகி வெற்றி பெற்ற 'பிளாஸ்ட்' படத்தில் ஒரு வெயிட்டான ஆக்சன் ரோல் கிடைத்தது. இந்த வேடத்திற்காக உடல் எடையை குறைத்து ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருந்தார் அபிராமி. இந்த படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது மேலும் சில புதிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் கமிட்டாகி வருகிறார் அபிராமி.
இந்த நிலையில் தற்போது தனது இணையப் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு ஸ்பைடர் மேன் வீடியோ வைரலாகி வருகிறது. தனது வீட்டு சுவரில் ஸ்பைடர் மேன் போன்று தலைகீழாக அவர் போஸ் கொடுக்கும் இந்த வீடியோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அதோடு அபிராமி வெளியிட்டுள்ள பதிவில், 'ஸ்பைடி சேலஞ்சை செய்து ஆக வேண்டும் என்று தோன்றியது. சிலந்திகளை கண்டு பயப்படும் எனக்கு இது ஒரு விதமாக மன நிம்மதியை தருவதாக அமைந்தது' என்று பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரது இந்த வீடியோவை பார்த்துவிட்டு, 42 வயதிலும் பிட்னஸை பராமரித்து இளவட்ட நடிகைகளுக்கு டப் கொடுக்கிறீர்கள் என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.